பொது செய்தி

தமிழ்நாடு

புதர் சூழ்ந்த கட்டடங்களால் அச்சம் :இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

Added : ஆக 03, 2020
Share
Advertisement
 புதர் சூழ்ந்த கட்டடங்களால் அச்சம் :இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள, பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்தாததால், புதர் சூழ்ந்து காணப்படுகிறது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், அலுவலர்கள் தங்குவதற்காக ஏழு குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதில், ஆரம்பத்தில் அலுவலர்கள் தங்கி பணிபுரிந்து வந்தனர்.பின், குடியிருப்புகளில் சரிவர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. கட்டடங்கள் கட்டி, 35 ஆண்டுகள் கடந்துவிட்டதால் பழுதடைந்துவிட்டது. இதனால், அலுவலர்கள் தங்குவதில்லை. இதில், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், பாம்புகள் அதிகம் உள்ளது. இதனால், இவ்வளாகத்திற்குள் வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.இதில் மூன்று குடியிருப்புகள் அகற்றப்பட்டு, வேறு சில கட்டடங்கள் கட்டபட்டுள்ளது. இதேபோல், மீதமுள்ள நான்கு குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு, புதிதாக குடியிருப்புகள் கட்டுவதற்கு, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தைசாமி கூறுகையில், ''ஒன்றிய குழுக்கூட்டத்தில் பழைய குடியிருப்புகளை அகற்றுவதற்கும், புதிதாக குடியிருப்புகள் கட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X