சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் மண்சரிவு: குடியிருப்பு சேதம்

Added : ஆக 03, 2020
Share
Advertisement
 மழையால் மண்சரிவு: குடியிருப்பு சேதம்

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திரா நகரில் எட்வர்டு என்பவரின் வீட்டின் பின் பகுதியில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டு சுவர் மற்றும் கூரை முற்றிலுமாக சேதமடைந்தது. மாலை நேரத்தில் இடிந்ததால் வீட்டினுள் இருந்த எட்வர்டு, அவரின் மனைவி செல்வராணி மற்றும் நான்கு குழந்தைகள் உயிர் தப்பினர். தகவல் அறிந்து, பந்தலுார் தாசில்தார் மகேஸ்வரி, எம்.எல்.ஏ., திராவிடமணி உள்ளிட்டோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 'குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட ஏற்பாடு செய்யப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X