48 மணி நேரத்திற்குள் ஜெகன் ஆட்சியை கலைக்க வேண்டும்: நாயுடு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Withdraw ,3-Capital plan or dissolve ,assembly, Chandrababu Naidu to Andhra Pradesh CM Jagan Reddy

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதா குறித்து மக்கள் கருத்து கேட்க வேண்டும். என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் தற்போது அமராவதி தலைநகரமாக விளங்குகிறது. இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும், ஆந்திராவில் 3 தலைநகரங்களாக பிரிக்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றினார். கவர்னர் பீஷ்வபூஷன் ஹரிசந்தன் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்

இது குறித்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியது, கடந்த 2019- சட்டசபை தேர்தலில் அமராவதி மாநில தலைவராக இருக்கும் மாற்றப்படாது என தேர்தலில் வாக்குறுதி அளித்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இப்போது மாநிலத்தை 3 தலைநகரங்களாக பிரிக்கும் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.


latest tamil newsமூன்று தலைநகரங்களாக பிரித்த விவகாரத்தில் மக்களிடம் பொது கருத்திற்கு விட வேண்டும். 48 மணி நேரத்திற்குள் சட்டசபையை கலைத்துவிட்டு முதல்வர் பதவியிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
08-ஆக-202018:44:28 IST Report Abuse
madhavan rajan உங்கள் பேரன்கிட்ட இருக்குற சொத்துலேர்ந்து ஆந்திர மக்களுக்கெல்லாம் தலைக்கு பத்து லட்சம் கொடுங்கள் உடனே அனைவரும் உங்கள் பின்னே நிற்பார்கள். உங்கள் தலையில் நீங்களே வாரிப்போட்டுக்கொண்ட மண்தானே.
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
07-ஆக-202010:06:52 IST Report Abuse
Sankare Eswar சந்துரு பேசாம இரும். இல்லேன்னா பெண்டு நிமிர்ந்திடும்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-ஆக-202019:45:03 IST Report Abuse
DARMHAR பிரதமர் மோடியைவிட தனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்று பெருமை பீத்திக்கொண்டவர் .தனது மாமனாருக்கே துரோகம் செய்தவர்.தான்ஆந்திர பிரதேச முதல்வராக இருந்த பொது எங்கே தான் செய்யும் அக்கிரம ஊழல்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்து சி. பி. ஐ உள்ளே வரக்கூடாது என்று .சொன்னவர் ஆந்திர மாநில சட்டசபையில் இவரது தெலுங்கு தேசம் பார்ட்டிக்கு 23 உறுப்பினர்களிலிருந்து 20 ஆக குறைந்த போதும் இவருக்கு புத்தி வரவில்லை
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
07-ஆக-202015:51:20 IST Report Abuse
s.rajagopalanபாவம்.. காய்ந்து போய் கிடக்கிறார் .. தேர்தல் வாக்குறுதியை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டு படு காமெடி யாரும் தன்னை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் .. இப்படி ஒரு 'பிட் ' டை போட்டு பார்க்கலாமே என்று இந்த பேச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X