சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன மழையால் வெள்ளப்பெருக்கு

Added : ஆக 03, 2020
Share
Advertisement
 கன மழையால் வெள்ளப்பெருக்கு

கூடலுார்:கூடலுார் பகுதியில், தொடரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கூடலுார், தேவாலா, ஓவேலி, முதுமலை, மசினகுடி பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.பாண்டியார்-புன்னம்புழா, மாயார் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 'இப்பகுதி மக்கள் நீர் நிலை பகுதிக்கு செல்ல வேண்டாம்,'என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'தொடர் மழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குடியிருப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டால், உதவுவதற்காக, அரசு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். ஆறுகளை ஒட்டி உள்ள, தேன்வயல், இருவயல் பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை மீட்டு தங்கவைக்க, தற்காலிக முகாம் தயார் நிலையில் உள்ளது. மேலும், இரவில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், மக்கள், 1077 என்ற எண்ணில் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்,' என்றனர்.பழங்குடி மக்கள் கூறுகையில்,'ஒவ்வொரு மழை காலத்திலும், நாங்கள் வசிக்கும் இப்பகுதியில் வெள்ளம் புகுந்து விடுவதால், நாங்கள் அருகில் உள்ள பள்ளியில் தஞ்சம் அடைந்து வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், எங்கள் அனைவருக்கும், பாதுகாப்பான தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X