டில்லியில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 937 பேர் மீட்பு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 937 பேர் மீட்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முக்கிய கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டில்லியில் இன்று புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,38,482 ஆக அதிகரித்தது. நோய் தொற்றுக்கு மேலும் 17 பேர் பலியானதுடன் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்தது


latest tamil news



டில்லியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுவோரின் விகிதமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 937 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,24,254 ஆக உயர்ந்தது. தற்போது 10,207 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 10,133 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. டில்லியில் இதுவரை 10,73,802 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X