'மாஜி'யின் தகுதி... மாறிய தொகுதி!

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 03, 2020
Share
Advertisement
நாளிதழை புரட்டி கொண்டிருந்தாள் மித்ரா. வீட்டுக்குள் வந்த சித்ரா, ''ஹாய் மித்து, இவ்ளோ ஜாலியா இருக்கே. ஆன்லைன் கிளாஸ் இல்லையா?'' என்றாள். ''லைன் பிராப்ளம்னு கேன்சல் ஆயிடுச்சு,''''உனக்கு லைன் பிரச்னை. தாசில்தாருக்கு, சேர்மன் பிரச்னை''''அக்கா... புரியற மாதிரி சொல்லுங்க''''காங்கயம் தாசில்தாரை திடீர்னு டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க. என்ன, ஏதுன்னு
 'மாஜி'யின் தகுதி... மாறிய தொகுதி!

நாளிதழை புரட்டி கொண்டிருந்தாள் மித்ரா. வீட்டுக்குள் வந்த சித்ரா, ''ஹாய் மித்து, இவ்ளோ ஜாலியா இருக்கே. ஆன்லைன் கிளாஸ் இல்லையா?'' என்றாள். ''லைன் பிராப்ளம்னு கேன்சல் ஆயிடுச்சு,''''உனக்கு லைன் பிரச்னை. தாசில்தாருக்கு, சேர்மன் பிரச்னை''''அக்கா... புரியற மாதிரி சொல்லுங்க''''காங்கயம் தாசில்தாரை திடீர்னு டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க. என்ன, ஏதுன்னு விசாரித்ததில், 'சமுதாய கூடங்கள் கட்ட, மரங்களை வெட்டறதுக்கும், கண்டிப்பா, 'பர்மிஷன்' வாங்கியே ஆகோணும்னு, தாசில்தார் சொல்லியிருக்கார்,''

''இதனால, கோபப்பட்ட புதுசா சேர்மன் ஆனவரு, மினிஸ்டர்கிட்ட 'கவர்மென்ட்' திட்டத்துக்கே பர்மிஷன் வாங்கோணும்னா, எப்படின்னு சொல்லிட்டு, மரங்களை வெட்டி தள்ளிட்டு, தாசில்தாரை பத்தி ஏதேதோ சொல்லி, டிரான்ஸ்பர் வாங்கி குடுத்திட்டார்,'' ''இது மட்டுமில்ல மித்து. மணல் அள்ற மேட்டரில்,பேரம் பேசறாங்கன்னு, ஒருவர் மேலிடத்துல, ஆதாரத்தோட சொன்னதும்கூட பிரச்னையாம்,'' ''இதனாலதான், ஆளுங்கட்சிக்காரங்களை கண்டா, சில அதிகாரிங்க பயப்படறாங்க போல,'' சொன்ன மித்ரா, ''இதேமாதிரி, 'சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யுங்கன்னு,'அதிகாரிங்க கேக்கறாங்களாம்,'' என புதிய மேட்டரை கூறினாள்.

''அது எங்கடி?''''குப்பாண்டம்பாளையம் சொசைட்டியில முறைகேடு நடக்குதுனு, ஊழியர்களை சஸ்பெண்ட் செஞ்சாங்க. சில ஆபீசர்களும் உடந்தையா இருக்கறதால, உத்தரவை ரத்து செய்யுங்கனு, சங்க தலைவர்கிட்ட கேட்டுட்டே இருக்காங்களாம். அவரும், பாக்கலாம், பாக்கலாம்னு சொல்லிட்டாராம்,''''அதுசரி. கவர்மென்ட் பங்ஷனில், 'குண'மான மக்கள் பிரதிநிதி கலந்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாராம்,''''எங்கீங்க்கா?''''மித்து, ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம், நெருப்பெரிச்சலில் புதுசா பில்டிங் கட்டி மாத்தியாச்சு.

இது, 'சவுத்'துக்கு பிடிக்கலை. எங்க ஏரியாவுக்கு வர்ற ஆபீச, அங்க கொண்டு போய்ட்டாங்கன்னு, சி.எம்.,க்கு புகார் கடிதம் அனுப்பிட்டு, விழாவை 'பாய்காட்' பண்ணிட்டாராம். பங்ஷனில், சோஷியல் டிஸ்டன்ஸ் மிஸ்ஸிங்காம்,''''அங்க மட்டுமில்ல, எங்க பாத்தாலும், மக்கள் கூட்டமாத்தான் போறாங்க... வர்றாங்க!'' என்றாள் மித்து.மித்ராவின் அம்மா கொடுத்த புதீனா ஜூைஸ குடித்து கொண்டே, ''மாஜி மீண்டும் ஆளுங்கட்சியில, தஞ்சம் புகுந்ததால, கோஷ்டி பூசல் இன்னும் அதிகமாகுமோ?'' கேட்டாள் சித்ரா.''சிவமான மாஜியைத்தானே சொல்றீங்க. அவரு பெரிய பதவி வாங்கிட்டதால, கோஷ்டி கானம், கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் கேட்கும்,'' என்ற மித்ரா, ''அவிநாசியப்பரை எங்ககிட்ட இருந்து பிரிக்காதீங்கன்னு, திருப்பூர்க்காரங்க கண்ணீர் விடறாங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''அடடா, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு எவ்வளவு பக்தி...'' சிரித்தாள் சித்ரா.''பக்தி கடவுள்மேல இல்ல, கட்சி மேலதான். அவிநாசி தொகுதியை, கோவை புறநகர் வடக்கு மாவட்டத்துல சேர்த்ததுல, ஆளும்கட்சி நிர்வாகிகள் பயங்கர 'அப்செட்' ஆயிட்டாங்களாம். திருப்பூர் மாவட்டத்தில், வெற்றியை கொடுக்கும், 'சென்டிமென்ட்' தொகுதியை விட மாட்டோம்னு சொல்லி, முக்கிய நிர்வாகிகள், தலைமைக்கு மனுமேல் மனு போடறாங்களாம்,''''ஏன்டி மித்து, சிட்டி போலீஸ்காரங்க வரவர ரொம்ப சோம்பேறித்தன படறாங்க,''''எந்த பிரச்னை வச்சு சொல்றீங்க?''''மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் கோர்ட் உத்தரவை மீறி, மாடு வெட்டியிருக்காங்க. இதுபத்தி தெரிஞ்சும், அப்பகுதி அதிகாரி 'லேட்டாகத்தான் ஸ்பாட்டுக்கு' போனாராம். இவங்க போறதுக்கு, மாட்டு இறைச்சியை காரில் கொண்டு போயிட்டாங்க,''

''போலீசார் கரெக்ட் டைமுக்கு போகாததால், பதட்டம் நிலவியது. அந்தளவுக்கு அசால்ட்டா இருக்கிறதா, பப்ளிக் பேசிக்கிறாங்க,''''ஆமாங்க்கா, அது உண்மைதானே. ஆனா, இங்க பாருங்க. மக்கள் எதிர்ப்பால், டிரைவருக்கு நுாதன தண்டனை குடுத்தாங்களாம்,''''அட, இது எங்கடி நடந்தது?''''ஈரோட்டை சேர்ந்த சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜீப், முத்துாருக்கு வந்தது. போதையில இருந்த டிரைவரை புடிச்சு, மக்கள், வெள்ளகோவில் போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. அதனால, பக்கத்திலுள்ள ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு, 5 ஆயிரம் ரூபாய் கட்ட வைத்து, அனுப்பிச்சிட்டாங்களாம்,''

''சட்டம் எல்லாத்துக்கும் பொதுதானே. ஏன், அரசாங்க டிரைவர்னா, ஸ்பெஷலோ,' என்று, சிலர் போலீஸ்கிட்ட வாக்குவாதம் செஞ்சாங்களாம்,''''அக்கா, இந்த '...மலை' சப்-டிவிஷன், '...மங்கலம்' ஸ்டேஷனில், எப்.ஓ.பி., ஒருவர், போலீசாக மாறி, 'மாமூல்' வேலை பார்க்கிறாராம். 'சில்லிங்'கில் ஆரம்பிச்சு, சேவக்கட்டு வரைக்கும் வசூலிக்கிறாராம்,''''இப்படித்தான், போன வாரம் சேவக்கட்டில், புழங்கிய, 'லகர'த்தையும் அதே ஊர் போலீஸ் அமுக்கிட்டாங்களாம். அந்த வேலையும் இவர்தான் பாத்துக்கிட்டார். பசையுள்ள ஆட்களிடம், உடனே, 'சமாதானமாக' போயிடறாராம்,''அப்போது, 'நிரஞ்சன்' என்ற பெயரில் வந்த 'வாட்ஸ்அப்' மெசேஜ் படித்து விட்டு சிரித்தாள் சித்ரா.

''ஏங்க்கா, சிரிக்கிறீங்க?''''சொல்றேன் இருடி. சமீபத்தில் மாவட்ட மதுவிலக்கு ஆபீஸ்க்கு அதிகாரி ஒருத்தர் புதுசா ஜாய்ன் பண்ணாரு. அதே ஆபீசில், குழந்தைகள் தடுப்பு பிரிவு அதிகாரியும் போயி உட்கார்ந்திட்டாரு. இப்படி, ஒரே ஆபீசில் ரெண்டு விதமான அதிகாரி வந்ததால, மத்தவங்க குழம்பிட்டாங்களாம். இந்த குழப்பத்துக்கு காந்தமானவர்தான் காரணமாம், ,''''ஆமாங்க்கா... உண்மையிலேயே ஜோக்தான்,'' என சிரித்த மித்ராவிடம், விடைபெற்றாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X