பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் கிராமத்திற்கு சென்றோர் மீண்டும் நகரத்திற்கு திரும்புகின்றனர்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Migrant Workers, Migrants, lockdown, curfew, corona crisis, ஊரடங்கு

புதுடில்லி; ஊரடங்கு காரணமாக, சொந்த ஊர் திரும்பியோரில், மூன்றில் இரு பங்கினர், மீண்டும் வேலை தேடி நகரங்களுக்கு வரத் துவங்கியிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு பல முறை நீட்டிக்கப்பட்டது. இதனால், வேலைவாய்ப்பை இழந்த ஒரு கோடிக்கும் அதிகமானோர், நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறி, சொந்த ஊர் சென்றனர்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு வெகுவாக தளர்த்தப்பட்டதை அடுத்து, புலம் பெயர்ந்தோர், மீண்டும் நகரங்களுக்கு வரத் துவங்கியுள்ளனர். இது குறித்து, ஆகாகான் ஊரக ஆதரவு திட்டம், சேவா மந்திர் உள்ளிட்ட அமைப்புகள், ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆய்வறிக்கை விபரம்:சொந்த கிராமங்களுக்கு திரும்பியோரில், 29 சதவீதம் பேர், மீண்டும் நகரங்களுக்கு வந்து விட்டனர். 45 சதவீதம் பேர், வர முடிவெடுத்துள்ளனர். நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தான், கிராமங்களில் வேலை தேடுகின்றனர். நான்கு குடும்பங்களில், ஒரு குடும்பம், வறுமையால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

43 சதவீதம் பேர் இன்னும் அரை வயிறு தான் உண்கின்றனர். அதேசமயம், பொது வினியோக திட்டத்தில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதால், உணவு உட்கொள்வது சற்று அதிகரித்துள்ளது. மேலும், 6 சதவீத குடும்பங்கள், வீட்டுப் பொருட்களை அடமானம் வைத்து வாழ்க்கையை கழிக்கின்றன. 15 சதவீத குடும்பங்கள், கால்நடைகளை விற்று, பசியாறி வருகின்றன. 2 சதவீத குடும்பங்கள், நிலத்தை அடமானம் வைத்துள்ளன.

நிலத்தை 1 சதவீதம் பேர் விற்றுள்ளனர். 10 சதவீத குடும்பங்கள், உறவினர்களிடம் கடன் பெற்றுள்ளன. 7 சதவீதம் பேர், வெளியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆய்வு செய்த குடும்பங்களில், 71 சதவீதத்தினரின் வீட்டில், எரிவாயு இணைப்பு உள்ளது. அதில், 85 சதவீதம் பேர், மத்திய அரசின், 'உஜ்வாலா' திட்டத்தில் இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்கள். இவர்களுக்கு, ஜூன் மாதம் இலவச எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

90 சதவீத குடும்பங்கள், பிரதமரின் விவசாய மானியத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். அதில், 38 சதவீதம் பேரின் வங்கிக் கணக்கில், 2,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. வருவாய் இல்லாததால், 35 சதவீத குடும்பங்கள், வீட்டு விழாக்களை தள்ளி வைத்துள்ளனர். 13 சதவீதம் பேர், விழாவிற்கு குறைந்த எண்ணிக்கையில் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஆக-202019:11:53 IST Report Abuse
Endrum Indian 1) இதைத்தான் நான் அன்றே சொன்னேனே ஏதோ இவங்களுக்கு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துட்டு இப்போ திரும்பிப்போற மாதிரி நினைப்பு. இதே தான் இப்போ அயல்நாட்டு தொழிலாளர்களை கூட்டிக்கொண்டு வரும் விவகாரம் கூட. ஈரானில் பல இந்தியர்கள் தவிப்பு, மத்திய அரசு உடனே அவர்களை கூட்டிக்கொண்டு வரவேண்டும் இந்தியாவிற்கு என்று மீடியாவில் என்ன என்ன செய்தி. யார் அவர்கள் மீனவர்கள் ஈரானில் இப்போ வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு இப்போ என்ன செய்வார்கள். மெது மெதுவாக இப்போ திரும்பி போய் விடுவார்கள் ஈரானுக்கு??? 2) அது எப்படி டாஸ்மாக் நாட்டில் மட்டும் மீனவர்களுக்கு தொழிலாளர்களுக்கு பலருக்கும் வேலை இல்லை பண வரவு குறைந்தது ஆனால் டாஸ்மாக்கில் மட்டும் ஒரே நாளில் ரூ 175 கோடி வியாபாரம்??? என்ன நடக்கின்றது இந்த டாஸ்மாக்கினாட்டில்???
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
04-ஆக-202015:44:06 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை வட மாநில தொழிலாளர்கள் மாதிரி தமிழர்கள் அலையல, காரணம் ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சி அதும் எம்ஜியார் ரசிகர் மன்ற கட்சியினரையும் சேத்தி
Rate this:
05-ஆக-202000:06:39 IST Report Abuse
padma rajanயார் சொன்னது? எல்லா மாநில மக்களும் வேறு வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். நாக்பூரில் நம்ம ஆட்கள் தள்ளுவண்டியில் மசாலா தோசை வீட்டுக்கு வீடு வாசலில் நின்று சுடச்சுட போட்டுக் கொடுக்கிறார்கள். அங்கேயும் நம்ம ஊர் நாடார்கள் மளிகை கடை வைத்துள்ளார்கள். நம்ம ஊர் ஆட்கள் எங்கே எடுபிடி வேலையும் செய்கிறார்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள் துணிக்கடை வைத்துள்ளார்கள் ஹோட்டல்களில் வேலை செய்கிறார்கள். இந்தியா எல்லோருக்கும் சொந்தம் யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் பிழைப்புக்காக. எனவே வட மாநிலத்தவர் இங்கே வந்தால் கேவலமாக பேசக்கூடாது. அவர்கள் வராவிட்டால் கட்டுமான தொழில்கள் ஸ்தம்பித்து நின்றுவிடும் என்பது நிரூபணம் ஆகி விட்டது....
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
04-ஆக-202010:14:15 IST Report Abuse
Balasubramanian Ramanathan இதிலும் தமிழன் தனித்துதான் நிற்கிறான். ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளில் மட்டும் சராசரியாக 175கோடி ரூபாய்க்கு க்கு சரக்கு வாங்கி உலகின் மூத்தகுடி என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம் என்றறியாத நிலைதான் இந்தமாதிரி செய்திகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X