ஜாதவுக்கு வழக்கறிஞர்; பாக்., கோர்ட் அனுமதி

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020
Share
Advertisement
Islamabad High Court, Kulbhushan Jadhav, Pakistan

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட, வழக்கறிஞரை நியமிக்க, மத்திய அரசுக்கு அனுமதி அளித்து, பாக்., நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக, பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, ஜாதவுக்கு அனுமதி அளிக்கும் படியும், சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஜாதவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை துவங்கி உள்ளது.


latest tamil news



விசாரணையின் போது, ஜாதவ் சார்பில் வாதாடுவதற்கு, வழக்கறிஞரை நியமிக்க, இந்தியாவுக்கு அனுமதி அளித்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, அடுத்த மாதம், 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X