இந்திய ராணுவ ரகசியங்களை சேகரிக்கிறது சீனா; உளவு அமைப்பு வாயிலாக வாலாட்ட திட்டம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
India, China, LAC, இந்தியா, சீனா, ராணுவ ரகசியங்கள், உளவு அமைப்பு

புதுடில்லி: சீன ராணுவத்தின் உளவு அமைப்புகள் வாயிலாக, இந்திய ராணுவம் பற்றிய ரகசியங்கள், ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய தகவல்களை, சீனா சேகரித்து வருவதாக, பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்திய - சீன எல்லையில், லடாக் பகுதியில் சமீபத்தில், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, ஒருவரை ஒருவர் தாக்கினர்.


வீரர்கள் குவிப்பு:

சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர், வீரமரணம் அடைந்தனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சில், படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சீன ராணுவம், சில இடங்களில் படைகளை வாபஸ் பெற்றாலும், பெரும்பாலான இடங்களில் வீரர்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில், '61398' என்ற பெயரில், ரகசிய பிரிவு ஒன்று நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இணையம் வாயிலாக ஊடுருவி, மற்ற நாடுகளின் ராணுவ ரகசியங்கள், அங்குள்ள புவி அமைப்புகள், முக்கியமான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியை தொடர்ந்து ரகசியமாக செய்து வருகிறது. இந்த அமைப்பினர், தற்போது இந்திய ராணுவத்தை பற்றி முக்கியமான தகவல்களை மிகவும் ரகசியமாக திரட்டி வருகின்றனர்.


ஊடுருவல்:

இந்தியாவில் ராணுவ ரீதியாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியிலும், இந்த அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு ரகசியமான இடத்தில், இந்த உளவு அமைப்பின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஊடுருவி, மிக ரகசியமாக தகவல்களை சேகரித்து, சீன ராணுவத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக, 2014ல், சீனாவைச் சேர்ந்த ஆறு ராணுவ அதிகாரிகள் மீது, அமெரிக்கா வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது. இந்த அமைப்பு, ராணுவ ரகசியங்களை மட்டுமல்லாமல், மற்ற நாடுகளின் வங்கிகள் பற்றிய தகவல்கள், தொழில் துறை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றையும் திரட்டி வருகிறது.


முன் எச்சரிக்கை:

முக்கிய தகவல்களை சேகரித்த பின், இணையம் வாயிலாக ஊடுருவி, சம்பந்தபட்ட துறைகளை முடக்கி, குளறுபடியை ஏற்படுத்துவது, இவர்களின் திட்டம். தற்போது இந்த அமைப்பினர், இந்தியாவுக்கு எதிரான தகவல்களை திரட்டி வருவதால், பாதுகாப்பு துறை அதிகாரிகள், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


எல்லையில் கண்காணிப்பு: விதிகளை வகுக்க முடிவு

இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஐந்தாம் கட்ட ஆலோசனையில், ஒரு முக்கிய அம்சம் குறித்து அலசப்பட்டது. இதன்படி, எல்லையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும்போது, இரு நாட்டு வீரர்களும் அருகருகில் சந்திக்கும் சூழல் உருவாகிறது. இதுபோன்ற கண்காணிப்பு தான், மோதல் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் வரை, மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே, இரு தரப்பு வீரர்களும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

தற்போது, பெரும்பாலான நேரங்களில் கண்காணிப்பு நடக்கிறது. எனவே, இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையில், கண்காணிப்பு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, நேற்றும் பேச்சு தொடர்ந்தது.


பாக்., அமைச்சர்கள் ஆலோசனை:

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, ராணுவ அமைச்சர் பர்வேஸ் கட்டாக் ஆகியோர், நேற்று, நம் நாட்டின் காஷ்மீரை ஒட்டிய, பாக்., எல்லை பகுதிக்கு வந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாக்., வீரர்களுடன் ஆலோசனை நடத்தினர். இவர்களுடன், பாக்., பிரதமரின் தேசிய பாதுகாப்பு துறை சிறப்பு உதவியாளர் மொயீது யூசுப்பும் வந்திருந்தார்.

அப்போது அவர்கள், காஷ்மீர் விவகாரம் குறித்தும், பாக்., ராணுவம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது. பின்னணியில் பாக்., சமூக வலைதளங்களான, 'டுவிட்டர், பேஸ்புக், யூ டியூப்' போன்றவற்றில், எல்லை பிரச்னையை மையமாக வைத்து, இந்தியாவுக்கு எதிராக அவதுாறு பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன.

சீனாவைச் சேர்ந்தவர்களின் சமூக வலைதள கணக்குகள் வாயிலாக இந்த பிரசாரங்கள் செய்யப்படு வந்ததால், சீனாவில் உள்ளவர்கள் தான், இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், இந்த சமூக வலைதள கணக்குகளில் பெரும்பாலானவை, பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படுவது தெரியவந்து உள்ளது. எல்லை பிரச்னையில், இந்தியாவுக்கு எதிராக அவதுாறு பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சமூக வலைதள கணக்குகளில், பெரும்பாலானவற்றின் பயனாளர்கள் விபரம் மாற்றப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிலரின் உதவியுடன், சீன மொழியில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவதுாறு மற்றும் பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202022:44:07 IST Report Abuse
Ganesan Madurai நீ குஞ்சுமணி இல்லடா திருட்டு திராவிட கபோதி கம்யூனிஸ்ட் கம்னாட்டி காண்டு கான்கிரஸ்"நஞ்சுபோன"மணிடா
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,இந்தியா
04-ஆக-202022:28:43 IST Report Abuse
thonipuramVijay Arali , anthrox thadaviya aani pathiyapatta steel kambigalai readyaaga vaithukkollavum, valattinaal Nadu mandayil irakkavum...
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
04-ஆக-202021:04:38 IST Report Abuse
Somiah M நாம் மிகவும் கெட்டிக்காரர்களாயிற்றே .எப்பொழுதுமே .......................தும்பை விட்டுவிட்டு டைலை (டைல்) கெட்டியாக பிடித்துக் கொள்ளுவோமே . LOT OF MISTAKES.OCCUR...IN...TYPING...TRY..TO..CORRECT..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X