முதல்வர் பதவி விலக வலியுறுத்தி காங்., 'ஆன்லைன்' போராட்டம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில், தங்கக் கடத்தல் பிரச்னைக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர், 'ஆன்லைன்' வாயிலாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த மாதம் நடைபெற்ற, 30 கிலோ தங்க கடத்தலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்
Kerala, gold smuggling case, Pinarayi Vijayan, Congress

திருவனந்தபுரம்: கேரளாவில், தங்கக் கடத்தல் பிரச்னைக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர், 'ஆன்லைன்' வாயிலாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த மாதம் நடைபெற்ற, 30 கிலோ தங்க கடத்தலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில், நேற்று 'ஆன்லைன்' வாயிலாக, அரைநாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்படி, காங்., தலைவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தபடி போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தை, கேரள மாநில காங்., பொது செயலர் பொறுப்பு வகிக்கும் முகுல் வாஸ்னிக் துவக்கி வைத்தார். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, அவரது அலுவலகத்தில் இருந்தபடி போராட்டத்தில் பங்கேற்றதுடன், தங்க கடத்தல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை தேவை என, வலியுறுத்தினார்.

மாநில, காங்., தலைவர், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதுடன், 'ரா' பிரிவினரின் விசாரணைக்கு வலியுறுத்தினார். காலை, 9:30 மணிக்கு தொடங்கிய போராட்டம், மதியம், 1:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
04-ஆக-202013:08:22 IST Report Abuse
S.Baliah Seer கேரள காங்கிரசார் ஒரு மோசமான சந்தர்ப்பவாதிகள் என்பதற்கு அவர்கள் பினராயி அரசை ராஜினாமா செய்யச் சொல்வதிலிருந்தே புரிகிறது. ஒருவருக்கு கெட்ட பெயர் உண்டாக்க தந்திரங்கள் செய்வது சாதாரண விஷயம். இதைச் சரியாகப் புரிந்து கொண்டதால் கே.எஸ் அழகிரி அவர்கள் கேரள காங்கிரசை சாடியிருப்பது பாராட்டுக்கு உரியது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஆக-202013:05:58 IST Report Abuse
sankaseshan நம்ம ஊர் ஊடகங்கள் கப்சிப் இது பற்றி பேச மாட்டார்கள் அவ்வளவு நாட்டு பற்று .
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
04-ஆக-202009:13:31 IST Report Abuse
Chandramoulli காங்கிரஸ் மற்றும் உண்டிக்குலுக்கிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்ட நிலைப்பாடு. உங்கள் கொள்கை தான் என்ன . உண்டி குலுக்கிகளை ஒதுக்கி வைத்து விட்டு நீங்கள் இரண்டு மாநிலங்களிலும் போராடுங்கள் . அதுவே காங்கிரஸ் வளர வித்திடும். உண்டிக்குலுக்கிகளுடன் கூட்டு இருக்கும் வரை காங்கிரஸ் அம்பேல் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X