அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி கொள்கையை ஏற்காதீங்க! திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
NEP 2020, NEP, DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: 'தேசிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு முற்றிலும் ஏற்கக் கூடாது. தமிழ் கற்றல் சட்டம் தொடரும் என்று, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன். முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டாக, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எழுதியுள்ள கடிதம்:

தேசிய கல்வி கொள்கை, மத்திய அரசுக்கு, மும்மொழி திட்டத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது. இரு மொழி கொள்கைக்கு விரோதமான, மும்மொழி திட்டத்தை திணிப்பது போன்றவற்றை, எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தேசிய கல்வி கொள்கையை, தமிழக அரசு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

தமிழகத்தில், தமிழ் கற்றல் சட்டம் - 2006 தொடரும் என்று, அது தொடர்பாக, தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


முதல்வருக்கு நன்றி


'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: புதிய கல்வி கொள்கை என்ற பெயரால், மும்மொழி திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி. மத்திய அரசின் மொழி கொள்கை மட்டுமல்ல, கல்வி கொள்கையே, பல்வேறு தவறுகளை கொண்டது; மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பது. இதை சுட்டிக்காட்டி, முதல்வர் இ.பி.எஸ்., தன் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sai mahesh - coimbatore,இந்தியா
06-ஆக-202017:22:23 IST Report Abuse
sai mahesh ஹிந்தி தெரியாத காரணத்தினால் ஸ்டாப் செலக்ஷன் எக்ஸாம் எழுதி பாஸ் செய்து டெல்லியில் வேலே கிடைத்து ஒரு மாசத்தில் ஓடி வந்து இப்போ லாரி புக்கிங் ஆஃபிஸில் சிங்கி அடிக்குது
Rate this:
Cancel
Ramesh - Chennai,இந்தியா
05-ஆக-202016:50:58 IST Report Abuse
Ramesh ஆக மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருப்பவனை முன்னேற விட போவதில்லை இந்த திருட்டு கும்பல் கழகத்தினர். நம்மை அடிமை படுத்தி ஆட்சி நடத்தியவன் மொழி வேண்டும். நம்மை இணைக்கும் நமது தேசிய மொழி வேண்டாம். நயவஞ்சக நரிகள் இவர்கள் ....
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
05-ஆக-202015:30:29 IST Report Abuse
Rengaraj முப்பத்து நான்கு வருடம் கழித்து கல்வி கொள்கை மாற்றத்துக்கு வழிவகுத்து இருக்கிறது. இந்த கல்வி கொள்கை வரைவு வெளியிடப்பட்டு இத்தனை நாட்கள் ஆனபின்பும் இந்த அரசியல் வியாதியஸ்தர்கள் எங்கு இருந்தார்கள்? கொரோனா வருவதற்கு முன்பே வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. இவர்கள் என்ன தீர்க்கதரிசிகளா? தொழில் கல்விக்கு முன்னுரிமை தந்து கல்விக்கொள்கை அமைந்து இருக்கிறது அதில் என்ன தவறு? ஏதாவது மூன்றாவது மொழியை எடுத்து படிப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் வளர வேண்டும். அதற்காக மூன்றாவது மொழியை எடுத்து பாதிப்பதால் தமிழ் அழிந்து விடாது. மொழி ஆர்வலர்கள் உண்மையாகவே தமிழை வளர்ப்பதில் அக்கறை கொண்டு இருந்தால் தமிழ் என்றும் வாழ்ந்துகொண்டு இருக்கும். எந்த அரசாங்கமும் தேவை இல்லை. மக்களால் தான் அரசு.. பேச்சு தமிழ் , எழுத்து தமிழ், பள்ளி தமிழ், புது கவிதை தமிழ், இலக்கிய மேடை தமிழ் , பட்டி மன்ற தமிழ் , மீடியா தமிழ் என்று தமிழை வெவ்வேறு கோணங்களில் மாற்றி மாற்றி அதன் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட பார்க்கிறார்கள். அரசு மட்டுமே இதற்கு காரணம் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X