போன தடவையாவது ஒன்னு... இந்த தடவை கவ்வுமாம் மண்ணு!

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement
பணி நிமித்தமாக, கோவை கலெக்டர் ஆபீஸ் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அருகாமையில் உள்ள பேக்கரியில் அமர்ந்து, பேசிக்கொண்டிருந்தனர். தி.மு.க., கட்சிக்கொடி கட்டிய காரில், ஒருவர் வந்திறங்கினார்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, தி.மு.க., தலைமைக்கு ஆலோசனை சொல்ற, பிரசாந்த் கிஷோர் டீம், நம்மூரிலும் ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுத்திருக்காம்,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அப்படியா,
 போன தடவையாவது ஒன்னு...  இந்த தடவை கவ்வுமாம் மண்ணு!

பணி நிமித்தமாக, கோவை கலெக்டர் ஆபீஸ் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அருகாமையில் உள்ள பேக்கரியில் அமர்ந்து, பேசிக்கொண்டிருந்தனர். தி.மு.க., கட்சிக்கொடி கட்டிய காரில், ஒருவர் வந்திறங்கினார்.

அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, தி.மு.க., தலைமைக்கு ஆலோசனை சொல்ற, பிரசாந்த் கிஷோர் டீம், நம்மூரிலும் ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுத்திருக்காம்,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அப்படியா, என்ன சொல்லியிருக்காங்களாம்,'' என, ஆர்வத்தோடு கேட்டாள் சித்ரா. ''கடந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வராமல் போனதற்கு, கொங்கு பெல்ட்டில் வாங்கிய அடிதான் முக்கியக் காரணம். இந்த தடவை நிலைமை மாறியிருக்கான்னு ஆய்வு செஞ்சிருக்காங்க. அவுங்க கொடுத்த, 'ரிப்போர்ட்'டை பார்த்து, கட்சி தலைமை அதிர்ந்து விட்டதாம்,''

''ஏன், என்னாச்சு, அப்படி என்னத்தை சொல்லிட்டாங்க,''''வரும், 2021 தேர்தலிலும், கோவையில் ஒரு தொகுதியில் ஜெயிப்பது கூட கஷ்டம்னு சொல்கிறதாம் அந்த 'ரிப்போர்ட்'. சிங்காநல்லுாரில் கூட ஜெயிக்க முடியாதுன்னு சொல்லியிருக்கிறார்களாம். கட்சியை வளர்க்கறதை விட்டுட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் உள்ளடி வேலை செய்றாங்கன்னு சொல்லியிருக்காங்க,''''ஆமா மித்து. நம்மூர்ல, 20 வருஷத்துக்கு முன்னாடி, அசைக்க முடியாத சக்தியா, தி.மு.க., இருந்துச்சு. சீனியர்கள் பலரையும் ஓரங்கட்டிட்டு, தன்னை மிஞ்சி, கட்சிக்குள்ள வேற யாரும் வந்துடக்கூடாதுன்னு, குழி பறிக்கிறதுனால, 'வீக்'காகிட்டே போறாங்க.

இது, ஆளுங்கட்சிக்கு சாதகமா இருக்குது,''''அதிருக்கட்டும், ஆளுங்கட்சியிலும் அதிருப்தி அலை ஓடுதாமே,''''அதுவா, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான, பி.ஆர்.ஜி.,யை புறநகர் வடக்கு செயலாளராக நியமிச்சிருக்காங்க. ஆனா, தொகுதியை, மாநகர் மாவட்டத்தோடு இணைச்சிருக்காங்க. அதனால, அதிருப்தியில் இருக்காரு. தொகுதிக்குள்ள தனது ஆதரவாளர்களுக்கு ஏதாவது செய்யணும்னாலும், இன்னொருத்தரிடம் போயி நிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு,''

''துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சிடம், தனது ஆதங்கத்தை கொட்டிட்டாராம். தேர்தல் வரைக்கும், வடக்கு தொகுதியை தன்னுடைய பொறுப்பில் விடணும்னு கேட்டிருக்காராம்,''''அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்க. போன வாரம், கட்சி ஆபீசுக்கு மினிஸ்டர் வந்தப்ப, புதிய நிர்வாகிகள் வந்து, சால்வை அணிவித்து, பொக்கே கொடுத்து, வாழ்த்து வாங்குனாங்க. பி.ஆர்.ஜி., கட்சி ஆபீஸ் பக்கமே வரலையாம்.''அப்புறம், எந்தெந்த தொகுதியில யார் யாரை நிறுத்துறதுன்னு, ஏற்கனவே பேசி முடிவு செஞ்சிட்டாங்களாம்.

தொகுதியை பலப்படுத்துறதுக்கு, இப்ப இருந்து என்னென்ன வேலை செய்யணுமோ, அதை செய்யச் சொல்லிட்டாங்களாம். வடக்கு தொகுதியில் வடவள்ளிக்காரரும், தொண்டாமுத்துாருல அன்பானவரும் களமிறங்கப் போறாங்களாம்,''''அப்படியா, அப்ப, வி.ஐ.பி., என்ன செய்யப் போறாராம்,'' என, ஆச்சரியத்தோடு சித்ரா கேட்க, ''தேர்தல் சமயத்துல கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் வந்தா, சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நெருக்கடி வரலாம்.

அப்ப, தொகுதியை முடிவு செய்யலாம்னு இருக்காராம்,'' என்றாள் மித்ரா.''ஓ... அப்படியா...'' என்ற சித்ரா, ''நோய் தொற்று நிலவரம் சொல்லவே இல்லையே,'' ரூட் மாறினாள்.''அதான், வைரசுடன் வாழப் பழகணும்னு சொல்லிட்டாங்களே, அப்புறமென்ன?,''''கலெக்டரே, இன்னும் பணிக்குத் திரும்பலைன்னு சொல்றாங்களே, அதான் கேட்டேன்,''''ஆமாக்கா, உண்மைதான்! ஆஸ்பத்திரியில இருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி, வீட்டுக்கு வந்த பிறகு, மறுபடியும் பரிசோதனை செஞ்சிருக்காங்க. 'பாசிட்டிவ்'ன்னு, 'ரிசல்ட்' வந்திருக்கு. அதனால, வீட்டிலேயே தனிமைப்படுத்திட்டு இருக்காராம்,''''நம்மூரிலும் உயிர் பலி கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகிட்டே போகுதே.

கவர்மென்ட் தரப்புல என்னதான் செய்யப் போறாங்க,''''இந்த வார கடைசிக்குள்ள, பலி எண்ணிக்கை, 100ஐ கடந்திரும்னு சொல்றாங்க. அதனால, படுக்கை வசதியை அதிகப்படுத்திட்டு இருக்காங்க. 'டிஸ்சார்ஜ்' ஆகுறவங்க எண்ணிக்கையும் அதிகமாகிட்டு போறதுனால, மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையோடு இருக்கு,''''அதெல்லாம் சரி, 'டிஸ்சார்ஜ்' ஆகுறவங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தால், வாகன வசதி இல்லாம அல்லாடுறாங்க. வண்டி வசதி செஞ்சு கொடுத்தால் நல்லா இருக்கும்,'' என்றபடி, ஸ்கூட்டரை, 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மூடியிருப்பதை பார்த்த மித்ரா, ''அக்கா, நாலு மாசமா, அத்தனை கோர்ட்டுகளும் மூடியிருக்கிறதுனால, பொருளாதார ரீதியா வக்கீல்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்காங்களாம். கோர்ட்டுகளை திறக்கச் சொல்லி, பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டுக்காம இருக்காங்களாம். கோர்ட் வாசல் முன், போராட்டம் நடத்துறதுக்கு ஆலோசனை நடத்திட்டு வர்றாங்களாம்,''மித்ரா சொல்வதை கேட்டுக் கொண்டே, ரவுண்டானாவை சுற்றி வந்து, தெற்கு தாலுகா அலுவலகத்தை கடந்த சித்ரா,

''மித்து, சவுத் தாலுகா ஆபீசுல வருமானச் சான்று கேட்டு, 380 விண்ணப்பம் கெடப்புல கெடக்குதாம். 'இணைப்பு' சான்று சரியில்லைன்னு சொல்லி, விண்ணப்பத்தை நிராகரிக்கிறாங்களாம். கொரோனா காலத்திலும், ஜனங்களை இப்படியும் கஷ்டப்படுத்துறாங்க,'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.''ஆமாக்கா, நீங்க சொல்றதும் சரிதான்! கொரோனாவுக்கு மருத்துவமும், சிகிச்சையும், நிவாரணமும் கொடுத்தா போதாது; கவர்மென்ட் ஆபீசுல மக்களை எப்படி அலைக்கழிக்கிறாங்கன்னு, ஆளுங்கட்சி வி.ஐ.பி., இனியாவது புரிஞ்சுக்கணும்,

''ரேஸ்கோர்ஸ் வழியாக சென்றபோது, ஆவின் வாகனம், முந்திச் சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, விளாங்குறிச்சி, விநாயகபுரம் ரோட்டுல இருக்குற ஆவின் டீக்கடையில், சனிக்கிழமை சாயாங்காலம் 'சரக்கு' வியாபாரம் அமோகமா நடக்குதாம். ரோந்து போலீசாரும் கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள்.''டீக்கடையில் சரக்கு விற்பனையா,'' என, புருவத்தை உயர்த்திய மித்ரா, ''பிளிச்சி ஊராட்சியில், யாரு ஒஸ்தின்னு பிரச்னை ஓடிட்டு இருக்குதாம். 'துணை'யானவரு, அடிக்கடி விருந்து உபசாரம் செஞ்சு மத்தவங்களை, தன்னுடைய கட்டுப்பாட்டில் வச்சிருக்காராம்,'' என்றாள்.''அதெல்லாம், வழக்கமா நடக்குறது தானே! கார்ப்பரேசன் மேட்டர் எதுவும் சொல்லாம, நழுவுறீங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள் சித்ரா.''அக்கா, கார்ப்பரேஷன் இன்ஜினியரிங் செக்சன்ல ஏகப்பட்ட கோஷ்டி இருக்கு. 'வைரஸ்' பிரச்னை இருந்தும், நிர்வாக பொறியாளர் அந்தஸ்துல இருக்கற ரெண்டு அதிகாரிங்க, ஆபீஸ் பக்கமே தலை காட்டுறதில்லையாம்.

கமிஷனர் நடத்துற ஆய்வு கூட்டத்துக்கும் வர்றதில்லையாம்...,''சாரதாம்பாள் கோவிலுக்கு முன், மரத்தடியில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''பில்டிங் அப்ரூவல் கொடுக்குறதுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்திருக்காங்களே, அதை பத்தி விசாரிச்சியா,'' என, நோண்டினாள்.

''ஆமாக்கா, நானும் விசாரிச்சேன். கார்ப்பரேஷன் அதிகாரிங்க, புனே சாப்ட்வேரை கைவிட மறுக்குறாங்க. தமிழக அரசு சொல்ற சாப்ட்வேரை பயன்படுத்துனா, 'ஆன்-லைன்'ல அனுமதி கொடுக்கலாம்; ஜனங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்னு, வரைவாளர்கள் கேக்குறாங்க. ஆனா, கரன்சி எண்ண முடியாதுங்கிறதுக்காக, அந்த சாப்ட்வேரை பயன்படுத்துறதுக்கு கார்ப்பரேஷன் அதிகாரிங்க தயங்குறாங்களாம்,''கோவிலுக்கு வெளியே நின்றபடி, சுவாமி தரிசனம் முடித்து விட்டு புறப்பட்ட சித்ரா, ''ரெண்டு வழக்கு பதிவு செஞ்சும், இன்னும் கைது செய்யாம இருக்காங்களாம்,'' என, புதிர் போட்டாள்.

''என்னக்கா, என்ன விஷயம், கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்,''''பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ல இருந்த முக்கியமான நிர்வாகி, போலீஸ் அதிகாரிகளிடம் தனக்கிருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, ஏகப்பட்ட பேரை ஏமாத்தியிருக்காராம்; கட்டப்பஞ்சாயத்தும் செஞ்சிருக்காராம். நெருங்கிய நட்பில் இருந்த ஒருத்தரே, கமிஷனர் ஆபீசில் புகார் தெரிவிச்சிருக்கார். இதுவரைக்கும் ரெண்டு மோசடி வழக்கு பதிவாகியிருக்கு. இதுல, என்ன மர்மம் இருக்குன்னு தெரியலை; இன்னும் கைது நடவடிக்கை பாயாம இருக்கு,''''எனக்கொரு போலீஸ் மேட்டர் தெரியும்,'' என்ற மித்ரா, ''கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, துடியலுார் ஏரியாவுல, கஞ்சா சேல்ஸ் சக்கைப்போடு போடுதாம்.

'டெய்லி' ஒரு 'ஸ்பாட்' வச்சிருக்காங்களாம். கஞ்சா புகைப்பவர்களை போனில் தொடர்பு கொண்டு, அங்க வரச் சொல்றாங்களாம்; கொஞ்ச நேரத்திலேயே, பல ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு விற்குதாம். காவல்துறையை சேர்ந்த சிலரும் அவுங்களுக்கு உதவிகரமா இருக்காங்களாம்,'' என்றாள்.''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''நம்மூருக்கு புதுசா வந்திருக்கிற எஸ்.பி., அருளரசு, ஒவ்வொரு ஸ்டேஷனா போயி, ஆய்வு நடத்துறாராம். மூணு வருஷமா நிலுவையில் இருக்குற வழக்குகளை பார்த்து அதிர்ச்சி ஆகிட்டாராம். 30 நாளுக்குள் முடிக்கணும்னு, கறாரா உத்தரவு போட்டிருக்கிறாராம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X