பொது செய்தி

இந்தியா

கேரளாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 15,278 பேர் மீண்டுள்ளனர்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை மொத்தம் 15,278 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 57 சதவீதமாக உள்ளது. மாநிலம் முழுவதும் 11,484 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.



latest tamil news



இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 962 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,867 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 801 பேர் கொரோனா பாதித்தவர்கள் தொடர்பில் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 40 பேருக்கு தொற்று யார் மூலம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதில் 55 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 85 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 205 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்திில் 106 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 101 பேருக்கும், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 85 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 66 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 59 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 37 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 36 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 35 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 33 பேருக்கும், வயநாட்டில் 31 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 26 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டது.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் 19,343 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 1,43,251 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் 10,779 மருத்துவமனைகளில் உள்ளனர். . இதுவரை மொத்தம் 4,29 மாதிகரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 506 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
04-ஆக-202008:31:28 IST Report Abuse
Balasubramanian Ramanathan செய்தியை படித்த தமிழ் நெஞ்சங்கள் நெகிழ்ச்சி. செய்தியை வெளியிட்டதற்க்கு தமிழர்களின் நன்றி பாராட்டுதல்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X