பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை:''ராமர் கோவில் பூமி பூஜை விழாவில், அனைவரும் இருந்த இடத்திலேயே,108 முறை, ராம மந்திரத்தை ஜெபித்து, ஆத்மார்த்தமாக பங்கேற்று, பிரார்த்தனை செய்வோம்,'' என காஞ்சி மடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.latest tamil newsஉத்தர பிரதேச மாநிலம்அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:காஞ்சி சங்கர மடம், காமாட்சியம்மன் கோவில்,ஏகாம்பரநாதர், மாமரத்தடிபெருமாள் கோவில், விஷ்ணு காஞ்சி ஆகிய இடங்களில்இருந்து, புனித மண் சேகரிக்கப்பட்டு, விமானத்தில்அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.பூமி பூஜைக்கு தேவையான வாஸ்து பொருளான, காஞ்சிபுரம், சங்குபாணி விநாயகர் கோவிலில் இருந்து, மரத்தினால் செய்யப்பட்ட கருங்காலி காதீரம், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, இரண்டு செங்கற்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பூமி பூஜைக்கு உபயோக படுத்தக்கூடிய, ஜெயா, நந்தா, பத்ரா, பவித்ரா, பூர்ணா பூஜை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ராமர், தமிழகத்தில் சஞ்சாரம் செய்துள்ளார். சீதாதேவிக்கு ராமேஸ்வரம் ஷேத்ரத்தை காண்பித்து, அதன் பெருமையை விளக்கி இருக்கிறார்.தமிழகத்தில், பல ராமர் கோவில்கள் சிறப்பாக அமைந்துள்ளன. பல ஊர்களின் பெயர்கள், ராமாயணத்துடன் தொடர்புடையதாக உள்ளன.


latest tamil newsகாஞ்சி அடுத்த திருப்பக்குழி, ராமபிரான் ஷேத்ரமாக விளங்குகிறது.தமிழகத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு, மேலும் வலுப்பெற, இந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்;நாம் பூஜிக்கும் காமதேனுவான கோமாதாவை பாதுகாக்க வேண்டும் என்பது, ஜெயேந்திரரின் விருப்பம்.
அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில், மக்கள் இருந்த இடத்திலேயே ஆத்மார்த்தமாக பங்கேற்று, 108 முறை, ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எனும் ராம மந்திரத்தை ஜெபித்து, பிராத்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
04-ஆக-202008:37:33 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர .தங்கள் ஆசிர்வாதம் குருநாதர் ஆசை அனைத்தும் இன்று இந்த வைபவம் நடக்கிறது ...ஜெயேந்திரர் ஸ்வாமிகள் நீண்ட கால கனவு ..இதற்காக அவர் பட்ட கஷ்டம் அனைத்து மத தலைவர்களை பல முறை சந்தித்து நீண்ட முன்னேற்றம் கண்டார் . வாழ்க எம்மான் ..
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202007:28:44 IST Report Abuse
SAPERE AUDE இந்த கொரோனா பரவிவரும் காலத்தில் கர்நாடகத்தில் உள்ள திருமடங்களைப் போல எல்லா எளியவர்களுக்கு தினசரி உணவு அளித்து ஆதரிக்க தமிழ்நாட்டில் உள்ள எல்லா மடங்களும் முன்வரவேண்டும். சமீப காலத்தில் சில மடங்கள் பெரிய சிலைவைப்பதிலும் கட்டிடங்கள் கட்டுவதிலும் ஆர்வம் காட்டி வருவது வருத்தமளிக்கிறது. மடாதிபதிகள் உபதேசம் செய்வதுடன் தாங்களே தர்ம காரியங்களில் ஈடுபட்டு வழிகாட்டிகளாக விளங்கவேண்டும்.
Rate this:
Cancel
ana -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202004:44:55 IST Report Abuse
ana அங்கேயும் போய் தூங்கிய மாட்டீங்க ளே சுவாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X