பொது செய்தி

இந்தியா

ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுச்சேரி:'ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீராம தாரக மந்திரத்தை பக்தர்கள் ஜெபிக்க வேண்டும்' என, ஸ்ரீ ஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஜெகத்குரு பதரீ சங்கராச்சாரியார் கேட்டுக் கொண்டுள்ளார்.latest tamil newsஸ்ரீ வித்யா பீடத்தின் ஸ்ரீகார்யம் சந்திரமவுலீச்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக பகவான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி வாழ்ந்து காட்டி உள்ளார். புண்ணிய ஷேத்திரமான அயோத்தியில் அவர் அவதரித்தார்.இலங்கை போருக்கு பின் தனது தம்பி லட்சுமணனிடம் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி கூறும்போது, 'இலங்கை தங்கத்திலான நகரமாக இருந்தாலும், எனக்கு சொர்க்க பூமியானது அயோத்தி மட்டுமே' என்று தெரிவித்து, தான் அவதரித்த தலமான அயோத்திக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.


latest tamil newsஅத்தகைய புனித ஸ்தலமான அயோத்தியில் நாளை 5ம் தேதியன்று ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஆலய நிர்மாணப் பணிகள் பூமி பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதன் மூலம், எண்ணிலடங்காத ராம பக்தர்களின் ஆசை பூர்த்தியாகும் தருணம் துவங்கி விட்டது.இந்த முக்கிய தருணத்தில் ஸ்ரீராம பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி 'ஸ்ரீராம ஜயராம ஜயஜயராம' என்கின்ற தாரக மந்திரத்தை பக்தியுடன் 108 முறை ஜெபித்து ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் அனுகிரகத்தை பெறுமாறு, ஸ்ரீ ஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஜெகத்குரு பதரீ சங்கராச்சாரியார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பூமி பூஜை நல்லமுறையில் நடப்பதற்கும், ஆலயம் கட்டும் பணிகள் தங்கு தடையில்லாமல் சிறப்பாக நிறைவேறுவதற்கும் நாளை 5ம் தேதியன்று ஸ்ரீ வித்யா பீடம் சார்பாக சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
04-ஆக-202012:45:46 IST Report Abuse
Raj அதோடு கொரோனாவை ஒழிக்க ஏதாவது தாரக மந்திரத்தை கண்டுபிடித்து தந்தால் மக்களுக்கு இந்த நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும்
Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஆக-202015:23:47 IST Report Abuse
வெகுளிதினம் குளிச்சுட்டு சுத்தமா கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.......
Rate this:
Cancel
Eswaran - TRICHY,இந்தியா
04-ஆக-202012:06:23 IST Report Abuse
Eswaran நிச்சயம் ராம நாம ஜபம் செய்வோம்.. இனியாவது இந்த நாடும் உலகமும் பகவான் ஸ்ரீ ராமர் ஆட்சி காலத்தில் இருந்தது போல சந்தோஷமாக இருக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
04-ஆக-202008:15:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நல்ல விசயத்துக்கு கூப்புடுறீங்க. ஆனா எங்களுக்கு பா ம் வெக்க கூப்புடுற கும்பலத்தேன் புடிக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X