பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

சென்னை; வங்கிகளில், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, வரும், 20ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.latest tamil news


இது குறித்து, அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், வரும், ௩1ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. ஆனாலும், '100 சதவீத ஊழியர்களுடன், வங்கிகள் வழக்கமான சேவையில் ஈடுபடும்' என, தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செயல்பாட்டு வழிமுறையை வெளியிட்டுள்ளது

.தற்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சிலர் தொற்றால் இறந்துள்ளனர். வங்கிகள், 100 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல செயல்பட்டால், தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வங்கி வணிக நேரத்தை, காலை, 11:00 முதல், பகல், 2:00 மணி வரை என, குறைக்க வேண்டும்; 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.


latest tamil newsஊரடங்கின் போது, அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்காக, சிறப்பு பஸ் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 20ம் தேதி, தமிழகம் முழுதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
04-ஆக-202017:09:16 IST Report Abuse
visu 50% ஊதியம் குறைப்பு செய்தால் சந்தோசமாக ஏற்று கொள்வார்களா .மக்கள் வரிப்பணத்தை மூலதனமாக்கி நடத்தப்படும் அரசு வங்கிகள் அதன் லாபத்தில் பெரும்பகுதியை ஊழியர்களின் ஊதியமாகவும் நலன்களுக்கும் செலவிடுகின்றன இவை தனியார் மயமாக்க படும்போது இந்த செலவுகள் குறையும் மக்களும் கேள்வி கேட்க முடியும் .அரசு நிறுவனங்களை நடத்துவதை விட அவற்றை கண்காணித்து சரியான வழியில் செயல் பட செய்வதே நலம் .ஏர் இந்தியா , பிஸ்னல் போன்ற அரசு நிறுவனங்களின் நிலையை பார்த்தால் தெரியும் ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்த அவ்வப்போது அளிக்கப்படும் கோடிக்கணக்கான பணம் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதே
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-ஆக-202016:30:22 IST Report Abuse
Lion Drsekar "வங்கிகளில், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, வரும், 20ம் தேதி வேலை நிறுத்தம்" இதற்குதான் தனியாரிடம் கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள், இங்கு நன்றாக கவனித்தால் சிரிப்புதான் வரும், வேலைக்கு மட்டுமே வரவேண்டும் என்று ஆணை , வேலை செய்யவேண்டும் என்று கூறவில்லை, வேலையும் செய்யவேண்டும் என்றால் என்ன ஆகும், வாழ்க வட்டிக்கடை ஊழியர்களே, வந்தே மாதரம்
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
04-ஆக-202016:29:10 IST Report Abuse
krish எனவே, வங்கி வணிக நேரத்தை, காலை 11:00 முதல், பகல், 2:00 மணி வரை என குறைக்க வேண்டும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்'. கூடவே, கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் வெளியிட்ட அறிவிப்பு என்னவெனில் - வங்கி, வங்கி பணியாளர், நுகர்வோர் நலம் கருதி, 1.கரோனா தொற்று பயம் உள்ள சமயத்தில், ஊழியரின் பகுதி வேலைநேரம் மட்டும் கணக்கீடு செய்யப்பட்டு, பணி செய்த ஊழியர்களுக்கு, அதற்குரிய தின ஊதியம் வங்கி வழங்க, ஊழியர்கள் சம்மதம் 2. வேலைக்கு வராத (50 சதவீத ஊழியருக்கு) அன்று, ஊழியர்கள் சம்பளம் கோரமாட்டார்கள். 3. வங்கி, அணைத்து ஊழியருக்கும் கரோனா காப்பீடு திட்டம், வங்கிகள் அமுல் படுத்தவேண்டும். 4. பொது போக்குவரத்து பேருந்து, ஊர்தி செயல்படும் வரையில், தங்கள் வாகனங்களை, எரிபொருள் பயன்படுத்தி வரும் ஊழியருக்கு,வேலைக்கு வந்த நாட்களுக்களுக்கு போக்குவரத்துக்கு பேட்டா வங்கிகள் வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X