பொது செய்தி

இந்தியா

‛'பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது': சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
india china, india china border row, india, china,‛'பிராந்திய ஒருமைப்பாடு, சமரசம் கிடையாது': சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்

புதுடில்லி,: இந்திய பிராந்திய ஒருமைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது' என, மூத்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான, ஐந்தாவது கட்ட பேச்சில், சீனாவிடம், இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா -- சீன ராணுவ உயர் அதிகாரிகள் மத்தியிலான, ஐந்தாம் கட்ட சமரச பேச்சு, சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள, மோல்டோ என்ற இடத்தில், நேற்று முன் தினம் நடந்தது. இரு நாட்டு அதிகாரிகளிடையே, 11 மணி நேரம், பேச்சு நீண்டது.அப்போது, கிழக்கு லடாக் பகுதியில், முன்பிருந்த நிலை தொடரவும், பான்காங் ஸோ உள்ளிட்ட, கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இருந்து, சீன ராணுவம், விரைவில் முழுமையாக திரும்ப பெறப்பட வேண்டும் என்பதை, ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.


latest tamil news




மேலும், பிராந்திய ஒருமைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது' என, சீன ராணுவத்திடம், நமது அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
04-ஆக-202015:42:23 IST Report Abuse
vnatarajan இந்தியாவின் பேச்சை சீனா ஒருபோதும் கேட்காது. ஆகையால் நமது நாட்டின் எல்லையை மீட்க போரைத்தவிர வேறு வழியில்லை. ஒருவேளை தற்போது சீன படைகள் இங்கு பின்வாங்கினாலும் சில நாட்களுக்குள் வேறு ஒரு எல்லையை பிடிப்பார்கள். ஆகையால் போர் தொடுத்து இந்த விஷயத்தில் முற்றுப்புள்ளி வைப்பதே சரியானதாகும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
04-ஆக-202013:34:19 IST Report Abuse
Sivagiri அப்பிடீன்னா என்னாங்கோ ? . . . ஒன்னும் பிரிய மாட்டிங்குது ? ? ?
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
04-ஆக-202008:25:43 IST Report Abuse
Chandramoulli இந்தியா சொல்வதை சீனா ஒருபோதும் கேட்க மாட்டார்கள் . இனிமேல் இந்தியா தான் முடிவு எடுக்க வேண்டும். பேசி பயன் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X