அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
tamil nadu, coronavirus, covid 19, coronavirus chennai, தமிழகத்தில்  2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

சென்னை : சிவகங்கை தொகுதி, காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியானதால், சென்னை வீட்டில் தனிமையில் உள்ளார்.சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், ஒரு வாரத்திற்கு முன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை, அவரே தெரிவித்துள்ளார். அவர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'என் அறிகுறி லேசானவை. மருத்துவர் ஆலோசனைப்படி, என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவ நெறிமுறையை பின்பற்ற வேண்டுகிறேன்' என, தெரிவித்துள்ளார்.


latest tamil news





தி.மு.க., - எம்.பி.ராமலிங்கம்



தி.மு.க., - எம்.பி.,தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகா, சீனிவாசநல்லுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 72; மயிலாடுதுறை தொகுதி, தி.மு.க., - எம்.பி.,யான இவர், 1ம் தேதி, முருகன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார்.நேற்று வெளியான முடிவில், அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன்




எம்.எல்.ஏ.,தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், 75. இதய கோளாறு காரணமாக, ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டுள்ளார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சென்றார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-ஆக-202017:51:29 IST Report Abuse
Malick Raja அவர்களும் மனிதர்களாக இருக்கையில் இதை வியப்பிற்கென்ன இருக்கிறது
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
04-ஆக-202016:36:24 IST Report Abuse
Baskar ஸ்டாலின் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போனதால் தான் அவன் கட்சி எம் எல் எக்கள் எம்பிக்க என்று கோரோனோ துரத்துகிறது. பத்தாது என்று அவன் கட்சியில் இருந்து ஒருத்தன், ஓடி விட்டான். இன்னும் சிலர் ஓட்ட பந்தயத்திற்கு தயாராக உள்ளனர் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
04-ஆக-202015:46:22 IST Report Abuse
S.Ganesan கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா என்பது புதிராக இருக்கிறது. தொகுதி பக்கம் போய் ஒரு வேலையும் பார்த்ததாக தெரியவில்லை. கொரோனாவை சாக்காக வைத்தது கொண்டு வெளிநாடு செல்ல திட்டம் போட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X