சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தாதா இறந்தது எப்படி? கோட்டை விட்ட கோவை போலீசார்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
கோவை : இலங்கை தாதா, கோவையில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.இலங்கையில் போதைப் பொருள் கடத்தும், நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், அங்கொட லொக்கா, 36. கடந்த, 2017-ல், மற்றொரு கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஏழு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலிருந்து தப்பி சென்னையில் பதுங்கினார்.இரு வேறு
coimbatore, sri lanka, sri lankan grandfather, tamil nadu news, crime news, இலங்கை தாதா ,இறந்தது எப்படி? கோட்டை விட்ட கோவை போலீசார்

கோவை : இலங்கை தாதா, கோவையில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.இலங்கையில் போதைப் பொருள் கடத்தும், நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், அங்கொட லொக்கா, 36. கடந்த, 2017-ல், மற்றொரு கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஏழு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலிருந்து தப்பி சென்னையில் பதுங்கினார்.இரு வேறு வழக்குகளில், சென்னை போலீசார், இவரை கைது செய்தனர். ஜாமினில் வந்தவர், பெங்களூரு தப்பினார். பெங்களூரில், ஜூலை 3-ல் அங்கொட லொக்கா கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.


latest tamil news
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அங்கொட லொக்கா, 2018ல் கோவை வந்தார். சேரன் மாநகரில், இவருடன், இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, 27, என்ற பெண்ணும் தங்கினார்.அம்மானி தான்ஜியின் கணவரை ஏற்கனவே கொலை செய்த, அங்கொட லொக்கா, அவருடன் வாழ்ந்து வந்தார்.முன்னதாக, அங்கொட லொக்காவுக்கு, மதுரை வக்கீல் சிவகாமி சுந்தரி, 36, தன் வீட்டில் மூன்று மாதம் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

சிவகாமி சுந்தரியின் நண்பர், திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன், 32, அங்கொட லொக்கா மற்றும் அம்மானி தான்ஜிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.அங்கொட லொக்கா, தன் குடியுரிமையை மறைத்து பிரதீப்சிங் என்ற பெயரில், திருப்பூர் முகவரியில் போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க இவர் உதவியுள்ளார்.இதையடுத்து, அங்கொட லொக்கா, கோவையில் பிரதீப்சிங்காக உலா வந்தார்.

ஜூலை, 4ம் தேதி அங்கொட லொக்கா மர்மமான முறையில் இறந்தார். அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.கோவை வந்த சிவகாமி சுந்தரி, உயிரிழந்தவர் தன் பெரியப்பா மகன் என, போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசாரும், அவர் வழங்கிய, போலி ஆதார் அட்டையை வைத்து வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

தற்போது, இவ்வழக்கில், அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், வக்கீல் சிவகாமி சுந்தரி தெரிவித்த தகவல்களை, முறையாக விசாரிக்காமல், போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மேலும், அங்கொட லொக்காவை கொலை செய்ய, அவரது எதிராளிகள் பலர் திட்டமிட்டனர். எதிராளிகளில் சிலர் சிறையிலும், வெளிநாடுகளிலும் தங்கியிருந்தனர். அவர்கள், பெண் ஒருவர் மூலம் அங்கொடா லொக்காவை விஷம் கொடுத்து கொலை செய்ததாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், அவர் கோவையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக, தற்போது தெரிவிக்கப்படுகிறது. அங்கொட லொக்கா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளன. இதையடுத்து, போலீசார் பிரேத பரிசோதனையின் ஒரு பகுதியான ரசாயன சோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.சி.பி.சி.ஐ.டி.,சர்வதேச அளவில், இவ்வழக்கு செல்வதால் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி நேற்று மாலை உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., சங்கர் மற்றும் அதிகாரிகள், வழக்கு குறித்த தகவல்களை கோவை மாநகர போலீசாரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அங்கொட லொக்கா மரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில்அனுமதிகைது செய்யப்பட்ட அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் மூவரையும் சிறையில் அடைப்பதற்காக, நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். கர்ப்பமாக இருந்த அம்மானி தான்ஜிக்கு, திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கர்ப்பம் கலைந்தது. அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jack J - Chennai,இந்தியா
16-ஆக-202006:16:43 IST Report Abuse
Jack J சென்னை ல இலங்கை அகதி சொல்லி ஏகப்பட்ட மக்கள் கள்ளத்தனமா நிறைய செய்யேறாங்க, அதுல பேங்க் லோன் வாங்குறாங்க எப்பெடி என்று பார்த்தால் இவங்க எப்படியோ ஆதார் அட்டை , பான், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை வங்கியிருக்காங்க. காலம் காலமா இருக்கும் தமிழ் நாடு இந்தியனுக்கு ரேஷன் கார்டு , வாக்காளர் அட்டை கிடைக்க கஷ்டப்படும் நிலையில் இலங்கை சேர்த்தனவான்களுக்கு எப்பெடி சாத்தியமாகிறது ? அதுபோக கள்ள பாஸ்போர்ட் ல வரங்க. ஒருநாள் தமிழ் நாட்டை ஸ்ரீலங்காமாதிரி அக்கப்போறாங்க கவனம் ..உஷார்..தினமலர் நிருபர்கள் இதுபோல இருக்கிறவங்கள கண்டுபிடித்து உங்களது கட்டுரை போட்டு காவல் துறைக்கு தெரிவிக்கலாம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
05-ஆக-202013:41:12 IST Report Abuse
Sampath Kumar பெரிய தியாகி இவர்க்கு விசாரணை ஒரு கேடு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-ஆக-202004:30:33 IST Report Abuse
J.V. Iyer "போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க இவர் உதவியுள்ளார்" - தேசவிரோத பயங்கரவாதிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X