பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், காலம்புழா ஆற்றில் வெள்ளம்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
tamil nadu, rain, weather update, நொய்யல், பில்லூர் அணை,  கனமழை, மேற்கு தொடர்ச்சி மலை, மழை, கனமழை

பேரூர் : கனமழை காரணமாக, கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில்,நேற்று மாலை, 3:00 மணி முதல், கனமழை பெய்து வருகிறது. அதனால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், மதியம், 1:00 மணிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாடியாறு, கல்கொத்தி, நரசீபுரம் வைதேகி பாஸ் உள்ளிட்ட அருவிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சின்னாறு, பெரியாறுகளில் நீர்வரத்து அதிகரித்ததால், மாலையில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி ராஜவாய்க்கால் வழியே வேடப்பட்டி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து சென்றது.


latest tamil news


இந்நிலையில், இன்று அதிகாலை சித்திரைச்சாவடி மற்றும் சென்னனூர் தடுப்பணைகள் நிரம்பின. அதையடுத்து, பேரூர் நோய்யல் படித்துறையின் வழியே கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், பேரூர் படித்துறை - வேடபட்டி போக்குவத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கனமழை காரணமாக பில்லூர் அணை நீர் மட்டம் 97 அடியை எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, 4 மதகுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


latest tamil news




இதனிடையே,நீலகிரி மாவட்டம், கூடலூர் நேற்று , இரவு முதல் இடைவெளியின்றி பெய்த மழையினால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை காலம்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, அப்பகுதியிலுள்ள புறமனவயல் பழங்குடி கிராம குடியிருப்பை சூழ்ந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றின் நடுவே கயிறு கட்டி, அங்கு சிக்கியவர்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அருகே உள்ள, அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 62.4 மி.மீ., மழை பதிவாகியு்ளது. அப்பர் பவானியில் 308 மி.மீ., அவலாஞ்சியில் 220 மி.மீ., கூடலூரில் 201 மி.மீ., அப்பர் கூடலூரில் 192 மி.மீ., பந்தலூரில் 108 மி.மீ., கிளன்மார்கனில் 100 மி.மீ., எமரால்ட்டிடல் 112 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news



நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மின்சார உற்பத்தி செய்யும் அணைகளில் நீர் மட்டம் 5 முதல் 10 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. சிறிய அணைகள் நிரம்பியுள்ளன. அங்கு, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்உற்பத்தி தடையின்றி நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
04-ஆக-202016:59:51 IST Report Abuse
ponssasi நீர் ஓடும் அழகே தனிதான். மழை நமக்கு ஒரு வரம், காடுகள் நமக்கு கொடை , இன்றைய கல்வி இதையெல்லாம் சொல்லித்தருவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X