சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

நீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா?

Updated : ஆக 08, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
நீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா?

'அவங்க ஆட்சிக்கு பின் நீக்கப்பட்டதை, அவர்களே வேண்டும் என, பல காலமாக கேட்கின்றனரா...' என, கேள்வி எழுப்பத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா அறிக்கை:

தேசிய கல்விக் கொள்கை - 2020ன்படி, 5ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக்கல்விக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை, தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். 1967 வரை, 5ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த மாற்றம்.

'அவர் மறைந்ததும், அவரின் கோரிக்கையும் நீர்த்துப் போய் விட்டதோ...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி:

புதிய கல்விக் கொள்கையின் முழுமையான அறிக்கை, மக்கள் பார்வைக்கு வைக்கவில்லை. வட மாநிலங்களில் மும்மொழி கல்விக் கொள்கையில், தமிழை ஒரு மொழியாக வைக்க வேண்டும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித் திருந்தார்.

'யாரெல்லாமோ, எதை எதையோ எடுக்கின்றனர்; மண் எடுக்க இன்னும் அனுமதி வழங்கப்படாமலா உள்ளது என, ஆச்சரியம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க முன்னாள் வாரியத் தலைவர், சேம நாராயணன் அறிக்கை:

விநாயகர் சதுர்த்திக்கு, இன்னும், மூன்று வாரங்களே உள்ளன. விநாயகர் சிலைகள் செய்ய தேவைப்படும் மண்ணை, ஏரி, குளங்களில் இருந்து எடுத்துக் கொள்ள, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

'அறிக்கையில் ஏன், பம்முறீங்க; அவதுாறு வழக்கு பாய்ந்து விடும் என்ற பயமா...' என, நெத்தியடியாக கேட்கத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:


latest tamil news
மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே கொடுத்த தீரன் சின்னமலை வழிவந்த தமிழகத்திற்கு, மக்கள் வரிப்பணத்தை பறித்த, பழைய ஓனரின் பங்களா வாங்கும் அடிமைகள் வாய்த்தது துரதிர்ஷ்டம். அவர்களை விரட்டுவோம்!

'அப்போ, ஆவின் பால் போல, காங்கேயம் பால் என, தனியாக விற்பீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி:

காங்கேயம் இன நாட்டு மாடுகளை பாதுகாக்க, சத்தியமங்கலத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில், ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, காங்கேயம் இன மாடுகளின் பால், தனியாக கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
05-ஆக-202021:36:59 IST Report Abuse
madhavan rajan தீரன் சின்னமலை கதையெல்லாம் இருக்கட்டும். உங்க தாத்தா சமாதிக்கு இடம் கேட்டு உங்க கட்சி ஜெ நினைவிடத்துக்கு போட்ட வழக்கை இரவோடு இரவாக வாபஸ் வாங்கினீங்களே. உங்கள் கொள்கை பிடிப்பைவிட அவர்களுடையது என்ன தாழ்ந்துவிட்டது.
Rate this:
Cancel
GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து
05-ஆக-202009:45:26 IST Report Abuse
GURU THENI எந்த மொழி வேணும்னாலும் படிப்பது எங்கள் உரிமை இந்த பெட் அனிமல் எல்லாம் வாழை சுருட்டி இருக்கவேண்டும்
Rate this:
Hari - chennai,இந்தியா
16-ஆக-202010:26:55 IST Report Abuse
Hariசூப்பர் உங்கள் கருத்து ,ஒருவன் எழுந்து நடமாடவே முடியலையாம் ஆனால் ஊர் ஊருக்கு ஒரு பொண்டாட்டி வேணுமாம்.எப்படி இருக்கு நியாயம் பாருங்க ,படிப்பு அறிவே அதிகம் இல்லாத தர்க்குறிகள் படிப்பைப்பற்றி பட்டிமன்றம் நடத்துது ,ஒன்னு செய்யுங்கள் பொது ஊடகங்களில் பட்டிமன்றமாக நடத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுங்க ,...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஆக-202006:17:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாட்டுலே (பலதனியார் பள்ளிகளைத்தவிர )அரசுப்பள்ளிகளில் வெறும் ரெண்டு மொழியே தான் அஞ்சாங்கிளாஸ் வரை தமிழ் தான் 6ம் வலுலேந்து தான் ஆங்கிலம் ,தங்கள்வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலவழிலேயே படிக்கலாம் ஆனால் பாமரன் என்றால் என்னடா அநியாயம் செய்யுறீங்களே நியாயமா ????????தமிழ்நாடுத்தவிர மற்ற மாநிலம்களிலே எல்லாம் ஹிந்தி படிக்கும் மாணவர்கள் +2 முடிச்சதும் உறுப்படையை கிட்டும் என்று IIT/BITS என்று போயிடுறாங்க அப்பாவின் வசதிபார்த்து போறாங்க .ராங்கி லே தெரியதும் பார்க்குறாங்க யு எஸ் க்கு பிறகு அப்பா அம்மா செத்தாக்கூட வராதுங்க பெத்தவாளுக்குக்கிட்டும் கோவிந்தாகொள்ளியேதான் வெளிலேந்துவந்த ஆங்கிலம் இப்போதுணமாய் அடிமையாக்கிட்டுது தன வீட்டுக்குழந்தைகள் தாஸ் பஸ் னு ஆங்கிலம்பேசினால் அவ்ளோதான் அப்பா அம்மா ஆகப்படும் ஆனந்தமிருக்கே சொல்லமுடியாது ,எங்கவீட்டுலே என் அப்பா எங்களை தமிழிலே தான் பேசணும் என்று கம்பெல் பண்ணுவார் ,பள்ளிலேயேகூட ஆங்கில டீச்சருங்க ஒன்லி இங்கிலீஷ் தான் பேசணும்னு கத்துவாங்க .எப்படியோ படிச்சுமுடிச்சுட்டோம் படிச்சதால் என்பிள்ளைகளுக்கு நானேதாண் டியுஷன் எடுப்பேன் படிக்கவைக்க உக்காரா வைப்பது மஹா பெரிய தண்டனை அப்போதான் ஒருகுட்டிக்கு தலைவலிக்கும் சுசுவந்துரும் தாகமாயெடுக்கும் பசிக்கும் அப்பப்பா எனக்கும் முமொழியே தெரிஞ்சதுதானாலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X