பொது செய்தி

இந்தியா

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒராண்டு நிறைவு; காஷ்மீரில் 144 தடை உத்தரவு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement
section 144, jammu and kashmir, srinagar, Union Territory, காஷ்மீர், கட்டுப்பாடுகள், சிறப்பு அந்தஸ்து,  தடை உத்தரவு

இந்த செய்தியை கேட்க

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஆக., 5 அன்றுடன் ஓராண்டு முடியும் நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அன்றைய தினம், பிரிவினைவாதிகள் மற்றும் பாக்., ஆதரவு பெற்ற குழுவினர் கறுப்பு தினமாக அனுசரித்து, வன்முறை மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததை தொடர்ந்து, தடை உத்தரவு போடப்பட்டது.

கடந்த ஆண்டு ஆக., 5ல் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் ஒராண்டு நிறைவு நாள் நாளை வருகிறது. இந்த நாளை, பிரிவினைவாத அமைப்புகளும், பாக்., ஆதரவு பெற்ற குழுவினரும் கறுப்பு நாளாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசாரும் உளவுத்துறையினரும் எச்சரிக்கை விடுத்தனர்.


latest tamil news




இதனையடுத்து போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு காஷ்மீர் மாநிலம் முதல் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா சூழ்நிலையில், மருத்துவ அவசர நிலை, உரிய அடையாள அட்டையுடன் அதிகாரிகள் நடமாட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X