பொது செய்தி

இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு: 7வது இடம் பிடித்தார் தமிழக மாணவர்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
UPSC Result, UPSC, Union Public Service Commission, Civil Services Examination, யுபிஎஸ்சி, சிவில்ச

புதுடில்லி : ஐ.ஏ.ஏஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்த 2019 செப்., ல் நடந்த சிவீல் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7 வது இடம் பிடித்துள்ளார். இவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர். மதுரையில் கேந்திர வித்தியாலயாவில படித்துள்ளார். தற்போது இவர் நாகர்கோவில் புன்னைநகரில் வசித்து வருகிறார். இவரது தந்தை மத்திய அரசில் உயர் அதிகாரியாவார்.

கடந்த 2019ம் செப்., மாதம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக நடந்த இந்த சிவில் சர்வீஸ் தேர்வை 829 பேர் எழுதினர். இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை கடந்த பிப்., ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேசிய அளவில் பிரதீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களில் பிரதீபா வர்மா என்பவர் முதலாவதாக வந்துள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 வது இடம் பிடித்துள்ளார். தமிழகளவில் முதலிடம் பிடித்துள்ளார்.


latest tamil news


மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில், 78 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 11 பேரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வு நடத்தும். இந்த ஆண்டிற்கான தேர்வு மே 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு, அக்.,4க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
05-ஆக-202011:04:16 IST Report Abuse
Rameeparithi வாழ்த்துக்கள் ... மக்கள் சேவையில் சாதனை செய்யுங்கள்
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
05-ஆக-202010:39:37 IST Report Abuse
கல்யாணராமன் சு. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.... மேலும் மேலும் வெற்றி பெற்று, நேர்மையான, நிறைவான வாழ்க்கை வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஆக-202020:00:18 IST Report Abuse
வெகுளி வாழ்த்துக்கள் கணேஷ்குமார் பாஸ்கர் சார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X