ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

டோக்கியோ: கடந்த 1945 ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது, உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில், 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 75வது ஆண்டுகள் ஆகின்றன. இதை நினைவுகூறும் வகையிலான ஒரு புகைப்படத் தொகுப்பு வெளியாகியுள்ளது.latest tamil news
ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட 6ம் தேதி, உலகின் முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குண்டு வீசப்பட்ட தகவலை, அட்லாண்டிக் கடலில் இருந்த, அமெரிக்க போர்க்கப்பலான அகஸ்டாவிலிருந்து, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் அறிவித்தார். அவர், 'இதற்கு முன் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய குண்டைவிட இது, 2,000 மடங்கு பெரிய குண்டு' எனக் கூறினார்.


latest tamil newsஇந்த குண்டுக்கு 'லிட்டில் பாய்' எனப் பெயர் சூட்டியிருந்தனர். முந்தைய அதிபர் ரூஸ்வெல்ட்டைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகத் தெவிக்கப்பட்டது. 12 - 15 ஆயிரம் டன் டி.என்.டி., வெடிபொருள் சக்தியை கொண்டிருந்த அந்த அணுகுண்டு, உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B-29 விமானத்திலிருந்து வீசப்பட்டது. 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை அந்த அணுகுண்டு நாசம் செய்தது. குண்டு விழுந்த இடத்திலிருந்து 500 அடி சுற்றளவில் இருந்த அனைவரும் உடனடியாக உயிரிழந்தனர். ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் உடைந்து சிதைந்தன.


latest tamil newsஇந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது. ஆனால், ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என, பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.இந்த குண்டு வீச்சுக்கும் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, நாகசாகி நகரத்தின் மீது மீண்டும் ஒரு அணுகுண்டு வீசப்பட்டது. இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர்.


latest tamil newsஇரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்ட பின், 1945 ஆக்ஸட் 8ம் தேதி, ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பானுக்கு வேறு வழியில்லாமல் போனது. இதயைடுத்து அதே மாதம் 14ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்தது ஜப்பான்.


latest tamil news
இந்த அணுகுண்டு வீச்சின் காரணமாக, ஆசியாவில் உலகப் போர் சட்டென முடிவுக்கு வந்தது. ஆனால், குண்டை வீசுவதற்கு முன்பாகவே ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X