பொது செய்தி

இந்தியா

நாளை ராமர் கோவில் பூமி பூஜை; சிறப்பு விமானத்தில் மோடி கிளம்புகிறார்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி: 500 ஆண்டுகாலம் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (ஆக.5) கோலாகலமாக நடக்கவுள்ளது. இதற்கென மோடி நாளை கிளம்பி செல்கிறார். அவர் இந்த விழாவுக்கென 3 மணி நேரம் உபி.,யில் தங்கி இருக்கிறார். முன்னதாக அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார்.



latest tamil news



சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோயில் 2.77 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதற்கென பல்வேறு புண்ணிய தலங்களில் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜைவிழா நாளை காலை 11 மணிக்கு மேல் நடக்கிறது. இந்நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும். பக்தர்கள் யாரும் வராமல் வீட்டில் இருந்தபடி விழானை பார்க்குமாறு அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. விழா மேடையில் பிரதமர், முதல்வர், கவர்னர் உள்ளிட்ட 4 பேருக்கு மட்டுமே இருப்பர்.

பூமி பூஜையை முன்னிட்டு, பல்வேறு பூஜைகள், யாகங்கள் உள்ளிட்டவை நேற்று துவங்கின. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு இந்த பூஜைகள் நடைபெற உள்ளன.கவுரி கணபதி பூஜையுடன், பூமி பூஜை நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. காசி, காஞ்சி, டில்லியில் இருந்து வந்திருந்தோர், இந்த பூஜைகளை செய்தனர்.


latest tamil news




ராமரை தரிசிக்கிறார்


அயோத்தி உள்ளிட்ட நாடு முழுவதும் அகல் விளக்கு ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை காலை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து அவர் ராமர் கோயில் வளாகத்தில் உள்ள ராமரை தரிசித்துவிட்டு விழா மேடைக்கு செல்கிறார். பின்னர் 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கலை அடையாளமாக எடுத்து வைத்து பூமிபூஜையை துவக்கி வைக்கிறார். விழாவுக்கென அழைக்கப்பட்டுள்ள 175 பேரில் 135 பேர் பல்வேறு பகுதியை சேர்ந்த சாமியார்கள் ஆவர்.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பது பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த உறுதிமொழியாகும். இதனை பா.ஜ., தொண்டர்கள் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடவுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
04-ஆக-202017:43:27 IST Report Abuse
Sanjay நாளைக்கு முடிந்த அளவில் சைவமாக இருக்க பாருங்கள் இந்துக்களே. ஜெய் ஸ்ரீ ராம்.
Rate this:
Cancel
V.Ramesh kumar - RAJAPALAYAM,இந்தியா
04-ஆக-202017:34:43 IST Report Abuse
V.Ramesh kumar அகல்விளக்கில் அசல் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி விளக்கேத்துவோம். இனிமேலாவது உலக மாசு நீங்கட்டும்.
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா தர்மத்தையும் சமத்துவத்தையும் உலகில் நிலை நாட்டிய கடவுள் ராமர். இந்தியாவுக்கு அருள் புரிவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X