வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது ஆத்திரத்தில் டிரம்ப் - புதிய கட்டுப்பாடுகள்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Donald Trump, Foreign Workers, Order, restrict, US, Contractors, டிரம்ப், வெளிநாட்டு பணியாளர்கள், கட்டுப்பாடுகள்

வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிறுவனம் ஒன்று அவர்கள் நாட்டவர்களை நீக்கிவிட்டு வெளிநாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், வெளிநாட்டு பணியாளர்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இருக்கும் கொரோனா பொருளாதார சூழலால் அந்நாட்டில் பலர் வேலையிழந்துள்ளனர். வேலை இழப்புகளை தடுக்க அரசு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதனை ஏராளமானோர் தொழிலதிபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற தனது பழைய பிரசாரத்தை கையிலெடுத்துள்ளார் டிரம்ப்.


latest tamil news


இந்த நிலையில் அமெரிக்க அரசுக்கு சொந்தமான டிவிஏ என்ற நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூன் மாதம் 62 ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, டேட்டா மற்றும் புரோகிராமிங் சம்பந்தமான வேலைகளை வெளிநாட்டவர்கள் மூலம் குறைந்த விலைக்கு செய்துள்ளது. இந்த விஷயம் அதிபர் டிரம்ப் கவனத்திற்கு வந்ததும், டிவிஏ-யின் சி.இ.ஓவை அழைத்து கடுமையாக சாடியவர், நிறுவனத்தின் தலைவரை அதிரடியாக நீக்கியுள்ளார்.


latest tamil news


தற்போது அரசு நிறுவனங்களின் எந்தெந்த பணிகள் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளில் அமெரிக்கர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் எச்-1 பி விசா நடைமுறையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், அது பற்றிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகக்கூடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
04-ஆக-202020:19:44 IST Report Abuse
Somiah M அமெரிக்க அதிபர் தனது நாட்டுக்காரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதில் தவறேதும் இல்லையே
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
04-ஆக-202017:08:19 IST Report Abuse
K.ANBARASAN தேர்தல் நெருங்க நெருங்க உலக அரசியல்வாதிகள் அனைவரும் இந்திய அரசியல்வாதிகளை தான் காப்பி அடிக்கிறார்கள்
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
04-ஆக-202017:03:41 IST Report Abuse
தமிழர்நீதி அமெரிக்காவை தங்கி பிடிப்பது நம்மூரர்கள் . ட்ரம்ப் ஒரு ஜெர்மானியர் .அவரு தனது நதி மூலத்தை தேடுவார்கள் என்பதை அறிந்து பதுங்க பாதுகாப்பாக அமெரிக்காவில் வியர்வை சிந்தி உழைக்கும் இஸ்ரயேலர் ,இந்தியர்களை குறிவைக்கிறார் . விளைவு அமெரிக்கா மொத்தமாக உத்திக்கும். சீனாவின் பொருளாதார தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் உலகம் , அமெரிக்காவை மாற்றாக எடுத்துக்கொள்ளும் , இதை உணராமல் உலகத்தின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் , அமெரிக்காவில் வேலை உருவாக்காமல் இனவெறி உருவாக்கி அதிபராக முயல்கிறார் .ஆண்டவன் இருக்கான் குமாரு . IQ குறைந்தவர்கள் பொதுவாக அமெரிக்காவில் அதிபர்ஆகிட முடியாது .முதல் முறையாக அமெரிக்காவிற்கு ஒரு ஆபத்து அதிபராக குந்தியிருக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X