'கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது': டிரம்ப்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

வாஷிங்டன்: 'மற்ற பெரிய நாடுகளை விட, கொரோனா வைரசை அமெரிக்கா தான் சிறப்பாகக் கையாள்கிறது' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



latest tamil news




உலக அளவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு, 47.13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,55,402 பேர் பலியாகி உள்ளனர்.


பெரிய பிரச்சினையில் இந்தியா!


இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:பல பெரிய நாடுகளைவிட நாங்கள் கொரோனா வைரசை சிறப்பாகக் கையாள்கிறோம். குறிப்பாக, இந்தியா, சீனாவைவிட கொரோனா வைரசை நாங்கள் சிறப்பாக எதிர்கொள்கிறோம். இந்தியா பெரிய பிரச்சினையில் உள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. பிற நாடுகளும் கொரோனாவால் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்கா 6 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளது. கொரோனா மருத்துவப் பரிசோதனைகளும் விரைவாக நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news



'மாகாண ஆளுநர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் எதிர்ப்பை மீறி, அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் ஊரடங்கைத் தளர்த்தினார். சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியில் நடமாடுவது அதிகரித்துள்ளது. இதுவே, கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது' மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
04-ஆக-202020:36:51 IST Report Abuse
mrsethuraman  உண்மை தான் .மற்ற நாடுகள் கொரோனவை போ போ என்று விரட்டுகிறது . உங்க நாடு தான்அதை விரட்டாமல் வரவேற்பு கொடுத்து தங்க வைக்கிறது .அப்போ நீங்க தானே கொரோனவை சிறப்பாக கையாள்கிறவர் ?
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் பேர் வரை காலி. ஆம், மிக சிறப்பாகக் கையாண்டுள்ளது.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
04-ஆக-202018:06:07 IST Report Abuse
Balasubramanian Ramanathan கேரளாவுக்கு வந்து பார்த்துட்டு பேசுங்க. இல்லையெனில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை கேட்டு உண்மையை உணருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X