பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில்-தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: அயோத்தியில் நாளை பூமி பூஜை நடக்க உள்ள ராமர் கோயில் விழாவானது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளதாக காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: எளிமை, தைரியம் கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் உ்ள்ளார்.
ராமர் கோயில், பிரியங்கா, பிரியங்கா வாத்ரா, பிரியங்கா காந்தி,

புதுடில்லி: அயோத்தியில் நாளை பூமி பூஜை நடக்க உள்ள ராமர் கோயில் விழாவானது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளதாக காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: எளிமை, தைரியம் கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் உ்ள்ளார். ராமர் எல்லாரிடமும் உள்ளார். ராமர் மற்றும் சீதையின் செய்தி மற்றும் ஆசியால், கோயிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் கலாசாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. இவ்வாறு பிரியங்கா பதிவிட்டுள்ளார்.


latest tamil news


டுவிட்டுடன் பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாகரீகம் மற்றும் இந்திய துணை கண்டத்தில், ராமாயணம் அழியாத ஒரு அடையாளத்தை வைத்துள்ளது. பல ஆண்டுகளாக, கடவுள் ராமரின் கொள்கைகள் இந்திய துணை கண்டத்திற்கு உதவியது. கடவுள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைவரின் நலனையும் ராமர் விரும்புகிறார்.



அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை அக., 5 நடக்கிறது. இந்த விழாவானது, கடவுள் ராமரின் செய்தி மற்றும் ஆசியுடன் தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ஒற்றுமைக்கான ஒரு அடையாளமாக திகழட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan - Pune,இந்தியா
04-ஆக-202023:27:55 IST Report Abuse
Radhakrishnan நேற்றுவரை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இன்று கலாச்சார அடையாளம் என்று கூறுகிறார். எதை நம்புவது? ஓட்டு பற்றி பயம் வந்துவிட்டதோ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
04-ஆக-202022:58:50 IST Report Abuse
Tamilnesan அன்னே என்ன தேடுறீங்க......."ஒண்ணுமில்ல, இங்க சந்துரு .....சந்துரு.....ன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்.........அவனை தேடுறேன்......ஹா...ஹா.... கடைசிலே இந்திய ஜனநாயகம் இப்படி முச்சந்திக்கு வந்து விட்டதே. ஓட்டுக்காக எப்படி எல்லாம் மாத்தி மாத்தி பேச வேண்டிருக்கு.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
04-ஆக-202022:48:40 IST Report Abuse
Tamilnesan வெட்கம் கேட்ட பிறப்பு. இவர்கள் தான் ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்னார்கள். ஒயர் பிஞ்சி போயி ஒரு மாசமாச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X