வைரலாகும் ஜார்ஜ் பிளாய்டின் புதிய வீடியோ; மீண்டும் கொதித்தெழுந்த கருப்பின ஆதரவாளர்கள்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபாலிஸ் நகரில் கள்ள நோட்டு அடித்து விற்பவரான ஜார்ஜ் பிளாய்டு நெடுங்காலமாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பின்னர் ஒரு நாள் அவர் டெரக் சாவின் உள்ளிட்ட 4 போலீசாரிடம் சிக்கினார். கருப்பினத்தவரான ஜார்ஜ் நான்கு போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். பின், காரின் அடியில் கைவிலங்கு மாட்டப்பட்டு படுக்க வைக்கப்பட்டார். அப்போது, அவரது கழுத்தில் டெரக் சா முஷ்டியை வைத்து தொடர்ந்து பல நிமிடங்கள் அழுத்தினார். இதில், ஜார்ஜ் உயிரிழந்தார். இதைத் தடுக்க முயன்ற பொதுமக்களை, மற்ற 3 போலீசாரும் அருகே நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டனர்.latest tamil news
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. ஜார்ஜ் உடல் கருப்பின மக்களின் இசை முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு போலீசாரும் கைது செய்யப்பட்டனர். 'அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என, கருப்பின அமைப்பான 'பிளாக் லைப் மேட்டர்ஸ்' அமைப்பு போராடியது. தற்போது ஜார்ஜ் விவகாரம் சற்று ஓய்ந்து உள்ள நிலையில், அவர் இடம்பெற்றுள்ள புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


latest tamil newsஇந்த வீடியோவை பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜார்ஜ் காவலர்களால் மடக்கப்பட்டு காரின் அடியில் கிடத்தப்பட்ட பின், காவலர் தாமஸ் லேன் ஜார்ஜை காப்பாற்ற முயன்ற பொதுமக்களை தடுப்பதில் மும்முரமாக இருந்தார். நான்கு போலீசாரது உடலிலும் பாடி கேமரா எனப்படும் சிறிய ரக கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தாமஸ் உடலில் பொருத்தப்பட்ட பாடி கேமராவில் ஜார்ஜ் தனது கடைசி நிமிடங்களில் அவதியுறுவது பதிவாகியுள்ளது.


latest tamil newsஇந்த வீடியோவில் 'காரின் அடியில் திணிக்கப்பட்ட ஜார்ஜ் தன்னால் மூச்சுவிட முடியவில்லை' எனக் கதறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காரணமாக உலகம் முழுவதும் அமைதியாக இருந்த கருப்பின ஆதரவாளர்கள் மீண்டும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
05-ஆக-202011:30:05 IST Report Abuse
vns Raja.. அமேரிக்காவில் காஞ்சிபுரத்தின் சட்டம் அல்ல நடைமுறையில் உள்ளது.அமெரிக்காவில் போக்குவத்து சாலையில் காரை நிறுத்தச்சொல்லும் காவலர் காரை அணுகும்போது ஓட்டுனரின் கைகள் car steerin wheel இல் இருக்கவேண்டும் ஓட்டுநர் அவரது இருக்கையில் அமர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர் கைகளைக் steering wheel மீது வைக்கக் கூறுவார். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த காவலர் அடுத்து செய்யும் செயல் அவருடைய கை துப்பாக்கியை வெளியே எடுப்பதுதான். ஓட்டுநர் காரை விட்டு வெளியே வர முயற்சித்தாலோ அல்லது கைகளை அவருக்கு தெரியும்படி காட்டவிட்டாலோ காவலருக்கு அந்த ஓட்டுனரை சுடும் அதிகாரம் உள்ளது. கூகிள் செய்து அறிந்து கொள்ளவும்.
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
04-ஆக-202021:34:23 IST Report Abuse
Thirumurugan ஜார்ஜ் கள்ள நோட்டு அடித்து வந்தார் என்று உங்களுக்கு யார் சொன்னது? ஏதாவது சாட்சி இருக்கா?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஆக-202021:23:35 IST Report Abuse
அறவோன் அமெரிக்காவுக்கு ஒரு ட்ரம்ப் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X