பொது செய்தி

இந்தியா

கிராமப்புற பொருளாதாரத்தை மீட்க ஆகஸ்ட் மழையை எதிர்பார்க்கும் அரசு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
AugustRain, Recovery, RuralEconomy, ErraticMonsoon, ஆகஸ்ட், மழை, கிராமப் பொருளாதாரம்,

புதுடில்லி: நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வரும் வேளையில் விவசாயம் மட்டுமே ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆகஸ்ட் மழையை அரசு எதிர்பார்த்து உள்ளது.

ஜூன் மாதம் நன்றாக தொடங்கிய பருவ மழை, ஜூலையில் படிப்படியாக குறைந்தது நின்று போனது. இந்த மழை தான் பயிர்கள் மற்றும் தானியங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானது. கிராமப்புற பொருளாதாரத்தின் எதிர்காலம் வரவிருக்கும் நாட்களில் பெய்யும் மழையை பொருத்தே இருக்கும் என்பதால் பொருளாதார வல்லுநர்கள் அதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியில் குறைவான பருவமழையே பெய்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பகுதியில் வழக்கமான மழை பொழிவு இருந்தது. மீதமுள்ள பகுதிகள் அதிக மழைப்பொழிவை சந்தித்துள்ளன. மழை மாதமான ஜூலை ஒட்டுமொத்தமாக 10% பற்றாக்குறையுடன் முடிந்தது. இது பயிர்களுக்கு மோசமானதாக இருக்கும்.


latest tamil news


இந்த பருவத்தில் இதுவரை உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட வடமேற்கு பிராந்தியத்தில் மழை இயல்பை விட 20% குறைவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிராந்தியத்தில் வழக்கமான அளவை விட 7% குறைவான மழையும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சராசரியை விட 10% அதிகமாகவும், தென் மாநிலங்களில் வழக்கமான அளவை காட்டிலும் 14% கூடுதலாகவும் மழை பொழிந்துள்ளது.

இதனால் பெரும்பாலான நீர்தேக்கங்களில் நீரின் அளவு உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழக்கமான மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது. பயிர் உற்பத்தியில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த மாத மழையை விவசாயிகளும், அரசும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மழை பொய்த்துப் போனால் குடிநீர் பற்றாக்குறை, குறைந்த பயிர் உற்பத்தி மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்ற பொருட்களின் அதிக இறக்குமதிக்கு வழிவகுக்கும். இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
04-ஆக-202020:13:49 IST Report Abuse
Somiah M மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்ததினால் டெல்டா மாவட்டங்களில் குருவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது .
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-ஆக-202018:58:57 IST Report Abuse
iconoclast மழையிலும் அரசியலா ? இவீங்க கையாலாகத்தனம் இப்ப தான் விளங்குது. ஏற்கனவே பொருளாதாரத்தை இந்த நிம்மி அடிச்சு துவம்சம் பண்ணிவிட்டார்கள். இனியும் மக்களிடம் உறிஞ்ச குருதி தான் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X