பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் தங்க இறக்குமதி ஜூலையில் 24% சரிவு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
India, July, GoldImports, Drop, 24Percent, இந்தியா, ஜூலை, தங்கம், இறக்குமதி, சரிவு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்க இறக்குமதி ஜூலை மாதத்தில், கடந்தாண்டு இதே காலத்தில் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஆகஸ்ட் 31 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு நகரங்களில் தங்க நகை விற்பனை கடைகள் மூடியிருந்த போதிலும், உள்நாட்டில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,230 ஆகவும், சவரன் ஒன்றிற்கு ரூ.41,920 ஆக உள்ளது.


latest tamil news


உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வோரான இந்தியா, நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 30 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்தாண்டு 39.66 டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை இறக்குமதி 1.71 பில்லியன் டாலர்களிலிருந்து, நடப்பு ஜூலையில் 1.78 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
04-ஆக-202020:01:48 IST Report Abuse
Ramona இறக்குமதி, ஏற்றுமதி இதெல்லாம் சரிபட்டு வராது, நம்ம கே.அரசாங்கம், ஸ்வபனா இருக்கும் போது எதுக்கு இறக்குமதி வரி கட்டி தங்கத்தை கொண்டு வர வேண்டும், ஸ்வப னா ஒரு போன் கால் பன்னால் போதுமே.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-ஆக-202018:09:07 IST Report Abuse
பாமரன் சொப்பனசுந்தரி கொண்டாந்ததை சேர்த்தீங்கன்னா கணக்கு சரியாகிவிடும் ஆபீஸர்....🙄
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X