பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 77.8 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்: விஜயபாஸ்கர்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Tamilnadu, CoronaDischarge, Ratio, VijayaBhaskar, தமிழகம், கொரோனா, குணமடைந்தோர் விகிதம், விஜயபாஸ்கர், அமைச்சர்

சென்னை: தமிழக அரசின் பன்முக நடவடிக்கையால் குணமடைந்தோர் விகிதம் 77.8 சதவீதம் ஆக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் பன்முக நடவடிக்கையால் குணமடைந்தோர் விகிதம் 77.8 சதவீதம் ஆக உள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை நிலையங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அளிக்கும் வசதி தமிழகத்தில் உள்ளது. இதுவரை 28,92,395 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news
உதயநிதி ஸ்டாலின்


தமிழகத்தில் கொரோனாவால் 43 டாக்டர்கள் இறந்துவிட்டதாக ஆதாரமில்லாத செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த செய்தி தவறானது. திமுக., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை வெளியிட்டு டாக்டர்களின் மனஉறுதியை சீர்குலைக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Domban -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202019:24:03 IST Report Abuse
Domban I appreciate the non stop positivity and maximum optimism shown my Health minister Dr.Vijaya Baskar, amidst huge political opposition pressure, public panic and confusion, Tamil Nadu health department handled the situation with upmost responsibility and commitment, Im not from ADMK party, as a common citizen, Im writing this..Thanks for controlling the gruesome viral pandemic...Thanks to all of the Tamil Nadu political parties, who remained patience and allowed the TN Government to do the Duty.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
04-ஆக-202018:45:07 IST Report Abuse
Chandramoulli உதயநிதிக்கு எச்சரிக்கை கொடுக்கிறார் . தவறான வீடியோ வெளியிட்டதால் வரதராஜன் மீது உடன் வழக்கு பாய்ந்தது . ஏன் இரட்டை நிலைப்பாடு. உண்மைக்கு புறம்பாக டாக்டர் மரணத்தை வெளியிட்ட உதயநிதி மீதும் வழக்கு தொடர வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X