பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 82 சதவீதம் கொரோனா பாதிப்பு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 82 சதவீதம் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நோய் தொற்று நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 82 சதவீதம் தொற்று பரவியுள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய சுகாதாரதுறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், கொரோனா பாதிப்பு சற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 50 மாவட்டங்களில் மொத்த பாதிப்பு 66 சதவீதமாகவும், கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து 2.10 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இது மார்ச்.,25 முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டதில் இருந்து மிக குறைவாக உள்ளது. மேலும் கொரோனா இறப்புகளில் 68 சதவீதம் ஆண் நோயாளிகளும், 32 சதவீதம் பெண் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் கொரோனா நோய்க்கு பலியாவோரில், 11 சதவீதம் [ 26 - 44 வயதிற்கு உட்பட்டவர்கள் ] , 37 சதவீதத்தினர் [ 45 - 60 வயதிற்கு உட்பட்டவர்கள் ] , 50 சதவீதத்தினர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து 2.10 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எணணிக்கை 12.30 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.


latest tamil news



நோயைக் கண்டறிவதற்காக இந்தியா ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 479 சோதனைகளை நடத்தி வருகிறது. நாட்டில் 28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் பாதிப்பு உறுதியான விகிதம் 8.89 சதவீதமாகும். இவ்வாறு கூறினார்.

கொரோனாவை கண்டறிவதற்காக இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகளில் 25 முதல் 30 சதவீதம் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பொது பேராசிரியர் பால்ராம் பார்கவா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X