போபால்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நாளை(ஆக.,5) நடைபெற உள்ள நிலையில், ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம் நடத்தினார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, காங்., மூத்த தலைவரும், ம.பி., முன்னாள் முதல்வருமான கமல்நாத் வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தனது வீட்டில், இன்று வேத விற்பன்னர்களை கொண்டு, அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தி உள்ளார். ராமர் படம் வைக்கப்பட்டு பூஜைகளும் நடத்தி, அவர் வழிபாடு நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE