பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று ஒரே நாளில் 233 பேர் 'டிஸ்சார்ஜ்'

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 233 பேர் இன்று தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news



கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து தலைமை அலுவலக ஊழியர்கள் மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அலுவலகத்தில் பணியாற்றி வந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர, பீளமேடு 5 பேர், ஆர்.எஸ்.புரம்., 6, சிங்காநல்லுார், பொள்ளாச்சி, சாய்பாபா காலனி, செல்வபுரம், கணபதி, காந்திபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிப்பு 5,688 ஆக உயர்ந்தது.இந்நிலையில், இன்று 233 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,918 ஆக உயர்ந்தது.


latest tamil news



கோவை மாவட்டத்தில், கொரோனாவால் பதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, 4,897 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 2,921 படுக்கைகள் மருத்துவனைகளிலும், 1,976 கொரோனா சிகிச்சை மையங்களிலும் உள்ளன. தற்போது, 1,714 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதில், 1,021 பேர் மருத்துவமனைகளிலும், 653 பேர் சிறப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X