பொது செய்தி

இந்தியா

குஜராத்: அரசு பள்ளியை ஆதரிக்கும் ஹிராபர் கிராமம்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

காந்திநகர்: ஆன்லைன் கல்விக்காக அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசு பள்ளிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் குஜராத் மாநில கிராமத்தினர்.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் டங்காரா தாலுகாவை சேர்ந்தது ஹிராபர் கிராமம். இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2 ஆயிரம் பேர். இக்கிராமத்தை சேர்ந்த 30 மாணவர்கள் பள்ளிகல்வி பயின்றுவருகின்றனர்.

தற்போதைய கொரோனா காலத்தை பயன்படுத்தி சில தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன . அதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஹிராப்பூர் கிராமத்தினர் உட்பட பல்வேறு நகர மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹிராப்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி துறை அதிகாரிகளும் இணைந்து கிராம மக்களிடயே கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. இதில் அக்கிராமத்தை சேர்ந்த 20 இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.


latest tamil newsதொடர்ந்து கிராமத்தின் 30 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் யாரும் தனியார் பள்ளியில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மாநில அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரையில் தனியார் நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை வசூலிக்ககூடாது என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்த ஐகோர்ட் அரசு மற்றும் பள்ளிகல்வி நிறுவனங்கள் இது குறித்து விவாதித்து தீர்வு காண வேண்டும் என கூறி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
05-ஆக-202004:37:10 IST Report Abuse
B.s. Pillai Government run schools and colleges should not be disturbed by hte new education policy. Actually there needs no new policy as far as education upto under graduation and the present tem should continue. The need of the hour is to provide the basic education to the masses and converting the total mass as great Scientists is futile and reach no where but make many still out of reach of simple basic education. This country is not USA. 98% of the Indian population is stilluneducated and needs basic education more.Being poor, the mid day meals is greater attraction for poor village kids to come to school. These basic provisions should never be disturbed for at least another 20 years. Mr.Modi Government has a lot of other immediate fields to attend to and revising the education tem should be pushed to the last of priorities. Please attend to uplifting of the economy, bring black money back to India and stop corruption at all levelswhich are the election manifesto to hte public. Please concentrate on these issues first. The matter of Vijay Mallaih , Diamond merchant Modi and other criminals back to India and fast forward the corruption cases of DMK and congress leaders. Leave confusing and making " கிச்சடி " of education tem.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X