அமெரிக்காவில் கொரோனாவிற்கான இறப்பு விகிதம் அதிகரிப்பு ; பாதிப்பு விகிதம் 5 % குறைவு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

வாஷிடங்டன் : அமெரிக்காவில் கொரோனாவிற்கான இறப்புகள் உயர்ந்து வருகின்றன. நோய் தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவீதமாக குறைகின்றன என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க அமெரிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக., 2 ம் தேதி வரையான நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த வாரத்தில் பலி எண்ணிக்கை தொடர்ச்சியாக நான்காவது வாரமாக 8,500 க்கும் அதிகமாக உயர்ந்தன. இது முந்தைய வாரத்தை விட 36 சதவீதம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் தொற்றுக்கான புதிய பாதிப்புகள் குறைந்து சில வாரங்களுக்கு பின் உயரக் கூடும். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 2 வது வாரமாக குறைந்துள்ளது என ஒரு பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ் மாநில மற்றும் மாவட்ட அறிக்கைகளின் படி, கடந்த வாரம் பதிவான புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 5 சதவீதம் குறைந்து சுமார் 435,000 ஆக குறைந்துள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது மூன்று மாநிலங்களிலும் புதிய நோய்த்தொற்றுகள் குறைவாக இருந்தபோதிலும், கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் கிட்டத்தட்ட 180,000 புதிய பாதிப்புகள் உள்ளன. ஓக்லஹோமா, மொன்டானா மற்றும் மிசோரி உள்ளிட்ட அமெரிக்காவின் 20 முக்கிய மாநிலங்கள் / மாகாணங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. ஓக்லஹோமாவில் குறைந்தது 9 வாரங்களிலும், மொசானாவில் குறைந்தது 8 வாரங்களிலும், மிசோரியில் 7 வாரங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.


latest tamil news



அமெரிக்காவில் கொரோனாவிற்கான சோதனை கடந்த வாரம் 6 சதவீதமாக குறைந்துள்ளது. இது மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து முதல் சரிவு என கூறப்படுகிறது. தேசிய அளவில் 8.2 சதவீத சோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் கருத்தில் கொண்ட 5 சதவீத அளவை விட இன்னும் அதிகமாக உள்ளது. ஏனெனில் சமூகத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நோய் பாதிப்புகள் அதிகம் இருப்பதாக இது தெரிவிக்கிறது. பகுப்பாய்வின் படி, அமெரிக்காவின் 31 மாநிலங்களில் கொரோனாவிற்கான பாதிப்பு விகிதங்கள் 5 சதவீதத்திற்கும் மேல் இருந்தன. இவற்றில் அலபாமாவில் 22 சதவீதம், மிசிசிப்பியில் 21 சதவீதம் , புளோரிடா மற்றும் கன்சாஸ் மாகாணங்களில் 19 சதவீதமாக உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X