மஹாராஷ்டிராவில் கொரோனா மீட்பு விகிதம் 65.37 சதவீதமாக உயர்வு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொரோனா மீட்பு விகிதம் 65.37 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக 7,760 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,57,956 ஆக அதிகரித்தது. மஹா.,வில் மேலும் கொரோனாவால் 300 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,142 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மஹா.,வில் புதிதாக ஒரே நாளில் 12,326 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,99,356 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,42,151 பேர் சிகிச்சையில் உள்ளனர் மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 65.37 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.52 சதவீதமாகவும் உள்ளது.


latest tamil news



மஹா,வில் மும்பையில் நேற்று கொரோனா தொற்று காரணமாக 709 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 56 பேர் பலியாகி யுள்ளனர். மும்பையில் மொத்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,18,130 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 6,546 ஆகவும் அதிகரித்தது. ஆயினும் மும்பையில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 90,962 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 20,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X