அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கொண்டாட திட்டம்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Indian Americans, celebrating, Ram Temple, bhoomi poojan

வாஷிங்டன்: ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.


latest tamil news



ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் '3டி'யில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஆக-202019:25:48 IST Report Abuse
Natarajan Ramanathan ..இன்று பூஜையில் கலந்து கொண்ட 94 பேர்களில் சுமார் முப்பது பேர் பிராமின்ஸ். நான்கு இஸ்லாமியர்கள். பத்துப்பேர் அமெரிக்கர்கள். சுமார் 50 பேர் எந்த ஜாதி என்று தெரியாத இந்தியர்கள். சர்ப்பிரைசாக கலந்து கொண்ட நான்கு இஸ்லாமியரில் ஒருவர் பாகிஸ்தானியர்.
Rate this:
Cancel
Vetri - Chennai,இந்தியா
05-ஆக-202009:09:40 IST Report Abuse
Vetri காரோண எணிக்கையா அதிகரிக்காம உட மாட்டாங்க போல.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஆக-202008:41:30 IST Report Abuse
Balasubramanian Ramanathan அமெரிக்காவில் உள்ள தன் உறவுகளை நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாறு வீரமணி அறிவுறுத்தியிருக்காராமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X