பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.30 கோடி நிதி: அறக்கட்டளை தகவல்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Ayodhya, Ram Temple, trust, fund

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று(ஆக.,4) வரை ரூ.30 கோடி நிதி வந்துள்ளது என ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார்.


latest tamil newsஇந்நிலையில், கோவில் கட்டுவதற்கு வந்த நிதி விவரங்களை அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதுகுறித்து அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆக.,4 வரை ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. நாளை மேலும் ரூ.11 கோடி நிதி வரும் என எதிர்பாரக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து ரூ.7 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் அனுமதியை, அறக்கட்டளை முழுமையாக பெறாததால், அந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். அனுமதி பெற்ற பின், பணத்தை பெற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sangu - coimbatore,இந்தியா
05-ஆக-202008:50:29 IST Report Abuse
sangu நம் குடும்பத்தினரின் கனவை சிதைத்து ஆடம்பரம் செய்யாமல் குறைந்த பட்ச ஆடை, எங்கும் நடை என இருக்க முயல்வோம்
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
05-ஆக-202008:42:44 IST Report Abuse
sangu ஐயப்பன் அவர்களே த இ அ து மத சார்பற்றது எனவே பணம் அனுப்பாது.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-ஆக-202008:21:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எப்படி பெரியார் அண்ணா சிலைகள் வைத்ததுபோலவா. உனக்கு கற்பனை என்றால் மற்றவர்களுக்கு தெய்வம். இது அவரவர் நம்பிக்கை சார்ந்தவை. ஆனால் உங்களை போன்று சமாதியில் பால். பண்டங்கள் வைத்து முரசொலி பேப்பரையும் வைத்து விட்டு அடுத்தவரிடம் பகுத்தறிவு பேசும் செயல் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X