கத்தாரில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 252 பேர் மீட்பு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

தோஹா : கத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 252 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கத்தாரில் நோய் பாதிப்பு அதிகரித்து இன்று ஒரே நாளில் 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கத்தாரில் நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,12000 ஆக அதிகரித்தது. தற்போது 3,107 பேர் சிகிச்சையில் உள்ளனர். கத்தாரில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 177 ஆக உயர்ந்தது.


latest tamil news



கத்தாரில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 252 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 1,08,254 ஆக உயர்த்தியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 390 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 2,356 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. கத்தாரில் இதுவரை 5,05,148 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X