அரசியல் செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் அனைத்து கட்சிக் கூட்டம்

Added : ஆக 04, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அனுமதியின்றி சுவர் விளம்பரம், பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து கட்சிக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பேசினார்.போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமை தாங்கினார்.

சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சத்தியராஜ், இளநிலை உதவியாளர் ஆயிஷா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் எழிலரசி பேசுகையில், 'சுவர் விளம்பரம், பேனர் போன்றவற்றை காவல்துறை மற்றும் பேரூராட்சி அனுமதி பெற்ற பிறகே அமைக்க வேண்டும். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் 3 நாட்களுக்கு முன்னர் மட்டுமே சுவர் விளம்பரம், பேனர் வைக்க வேண்டும்.நிகழ்ச்சி முடிந்த அன்றே சுவர் விளம்பரம் மற்றும் பேனரை அகற்றி விட வேண்டும். அனுமதியின்றி சுவர் விளம்பரம் பேனர் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

கூட்டத்தில் ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் குழந்தைவேல், இந்திய தேசிய காங்., நகர செயலாளர் குழந்தைவேல், ம.தி.மு.க., நகர செயலாளர் அருள், இந்திய கம்யூ., நகர செயலாளர் வேல்முருகன், த.வா.க., மாணவரணி மாவட்ட செயலாளர் கலைமணி, தி.மு.க., நகர துணைச் செயலாளர் மதியழகன், அ.தி.மு.க., நிர்வாகி செல்வராஜ், பா.ம.க., ஒன்றிய செயலாளர் ராஜதுரை, வி.சி., தொகுதி செயலாளர் சேரன், மாணவரணி நகர செயலாளர் கோவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X