பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இதே நாளில் அன்று


ஆக., 5, 1971

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 1914 ஏப்., 14ம் தேதி பிறந்தவர், கே.ஆர்.ராமசாமி. தன், 6வது வயதிலேயே, நாடக கம்பெனியில் சேர்ந்தார். 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ், ஸ்ரீ பால சண்முகானந்த சபை' ஆகிய கம்பெனிகளில் இணைந்து, நடித்து வந்தார்.

கடந்த, 1935ல் வெளியான, மேனகா படத்தில், பைத்தியக்காரனாக நடித்தார். இதுவே, அவரது முதலாவது படம். இதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், 1944ல், பூம்பாவை படத்தின் மூலம், கதாநாயகனாக உயர்ந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் மீதுள்ள பற்றால், 'கிருஷ்ணன் நாடக சபா' என்ற, நாடகக் குழுவைத் துவக்கினார்.

முன்னாள் முதல்வர், அண்ணாதுரையிடம் நட்பு பாராட்டினார். அவர் எழுதிய, வேலைக்காரி, ஓர் இரவு போன்ற படங்களில் நடித்தார். 1935 முதல், 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர், 1971 ஆக., 5ம் தேதி இயற்கை எய்தினார்.

'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர்.ராமசாமி காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
14-ஆக-202012:25:40 IST Report Abuse
Vaduvooraan அன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். திமுகவை ரொம்ப நம்பி கெட்டுபோனவர். நாடக கம்பெனி அனுபவத்தால் ஓரளவு பாட்டும் பாடக்கூடியவர். லட்சிய நடிகர், சொல்லின் செல்வர், சிந்தனை சிற்பி என்று கட்சிகாரர்களுக்கு மானாவாரியாக பட்டங்களை வாரி வழங்கி கொண்டிருந்த அன்றைய திமுக தலைமை இவரை மார்க்கெட் செய்ய தந்த பட்டம்தான் நடிப்பிசை புலவர் சினிமா உலகின் புகழையம் செல்வத்தையும் நிரந்தரம் என்று நம்பி கொள்கை பிடிப்பு தலைக்கு போனதில் தனது மூன்று கட்டு வீட்டை கட்சிக்கு எழுதி வைத்தார் அங்கு கட்சியின் தலைமை அலுவலகம் பல வருடம் இயங்கி வந்தது. கடைசி காலத்தில் ஒதுங்க இடம் இன்றி அவஸ்தை பட்டார். 60களின் மத்தியில் வந்த 'நாடோடி' படத்தில் எம்ஜியார் தயவில் ஒரு கவுரவ தோற்றத்தில் டாக்டராக வந்ததாக நினைவு. பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடிக்க திமுக முக்கியஸ்தர்களால் நேஷனல் பிக்சர்ஸ் அதிபருக்கு பரிந்துரை செய்தும் வாய்ப்பை சிவாஜியிடம் இழந்தவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X