விலை உயர்ந்த நீதி

Added : ஆக 04, 2020
Share
Advertisement
விலை உயர்ந்த நீதி

நீதி தாமதமின்றி விரைவாக கிடைக்க, அரசுகளும், நீதித்துறையும், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்கள், எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். வழக்குகள் ஒத்திவைக்கப்படுவது, அதிகரித்து வருகிறது. இன்றைக்கு, நீதி என்பது, விலை உயர்ந்ததாகி விட்டது.

வெங்கைய்யா நாயுடு, துணை ஜனாதிபதி

காங்., நிபந்தனை

காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வினரின் நட்புவட்டம் மற்றும் விருந்தோம்பலில் இருந்து, விலக வேண்டும். ஹரியானாவின், மானேசரில் வழங்கப்பட்டுள்ள, போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேற வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால், அவர்களுடன் பேச்சு நடத்த, கட்சி மேலிடம் முன்வரும்.

ரந்தீப் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்

ஹிந்துத்வா முன்னிலை

நம் நாட்டு அரசியலில், 1952 -- 80 மற்றும் 1980 -- 2010 வரை, பொது உடைமை கொள்கையும், மதசார்பின்மையும், முன்னிலை வகித்தன. இன்றைக்கு, அந்த இடத்தை, ஹிந்துத்வா பிடித்து உள்ளது. தேசிய அரசியல், நம் வேரை நோக்கி பயணிக்க துவங்கி இருக்கிறோம் என்பதையே, இது உணர்த்துகிறது.

கே.என்.கோவிந்தாச்சார்யா, மூத்த தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X