பொது செய்தி

இந்தியா

கொரோனா பராமரிப்பு நெறிமுறைகளை மேம்படுத்த தெலங்கானா தீவிரம் ; அமைச்சர் எட்டெலா ராஜேந்தர்

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020
Share
Advertisement

ஐதராபாத் : அரசு மருத்துவமனைகளில் நிலையான கொரோனா பராமரிப்பு நெறிமுறைகளை செயல்படுத்த மாநில அரசு தீவிரமாக செயலாற்றி வருவதாக தெலங்கானா சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்தார்.



latest tamil news



தெலுங்கானாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான முறை யில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆயினும் மருத்துவ நெறிமுறைகளை மேம்படுத்து வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளர் களுக்கு அரசின் சார்பில் வெபினார் (கருத்தரங்கு) நடந்தது. இதில் கொரோனா சிகிச்சை தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் வழங்கினர். அனைத்து அரசு சுகாதார நிறுவனங்களிலும் லேசான, மிதமான மற்றும் கடுமையான கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தரப்படுத்தப் பட்ட சிகிச்சை நெறிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்தார்.


latest tamil news



அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்றுக்கான ஸ்டெராய்டுகள், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பரிசோதனை சிகிச்சைகள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே பிரத்யேக வெளிநோயாளர் வசதிகளை வைத்திருக்க வேண்டியது அவசியம். தொற்று அச்சுறுத்தலால் மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்கின்றனர். பிற்காலத்தில், அவர்கள் தொற்றை பரிசோதித்த போதுதான், மருத்துவர்களிடமிருந்து சிகிச்சை பெற அவர்கள் போராடுகிறார்கள். இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய வேண்டும், இதனால் நோயாளிகள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு கூறினார்.


latest tamil news



இந்நிலையில் மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் நேற்று காந்தி அரசு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்தார். பல்வேறு மருத்துவத் துறைகளின் தலைவர்களுடன், சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். அமெரிக்காவைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் டாக்டர் விஜய் வி யெலந்தி உள்ளிட்ட மூத்த மருத்துவர்களுடன், காந்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களுடன் சுகாதாரதுறை அமைச்சர் ராஜேந்தர் பல மணி நேரம் உரையாடினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X