இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Political absurdity, India, Pakistan, Imran Khan, new map, pak

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர், குஜராத்தின் ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாக். பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாக். பிரதமரும், மாஜி கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான் தலைமையில் நேற்று பாக். அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சர்ச்சைக்குரிய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மற்றும் குஜராத்தின் ஜூனாகத் ஆகிய பகுதியை இணைத்து புதிய வரைபடத்திற்கு பாக். அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news


புதிய வரைபடத்தை அறிமுகம் செய்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், இந்நாள் நமக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள், காஷ்மீரை இரண்டாக பிரித்து ஆக. 5-ம் தேதி இந்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிராக நம் நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகிஸ்தான் மக்களின் ஆதரவுடன் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.


latest tamil newsஇந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜம்மு -காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில எல்லைப் பகுதிகளை இணைத்து, புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல் ஏற்கத்தக்கதல்ல. பாகிஸ்தானின் அபத்தமான இந்த நடவடிக்கை சட்டபடி செல்லாது, பாக்.கின் புதிய வரைபடம் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதையே உலகிற்கு உணர்த்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-ஆக-202018:10:18 IST Report Abuse
RajanRajan வெட்டி வேலை பார்க்கும் பக்கிகளை பி ஓ கே யில் இருந்து துரத்தியடித்து இந்திய வரைபடத்தை திருத்துவோம். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
05-ஆக-202022:21:02 IST Report Abuse
VELAN Sஇம்ரான் , வாயாலேயே வடை சுட்டுகிட்டு உட்கார்ந்திருக்கார் , , அப்படியே இருந்திட்டு போறாரு ....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
05-ஆக-202013:22:36 IST Report Abuse
Anand நம்மை பாகிஸ்தான் நேபாளம் உள்ளடக்கிய இந்திய வரைபடத்தை வெளியிட வைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கு இந்த இம்ரான் கூட்டணி...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஆக-202013:00:14 IST Report Abuse
Malick Raja நேபாளக்காரன் வரைபடம் போட்டு விட்டான் . பாக்கும் போட்டுவிட்டான் .. பங்களா போடப்போறான் .. சீனாவும் பிடித்தவுடன் போடுவான் . நம்மவால் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X