தேனி; ''கொரோனா தொற்று நோய் பரவல் சற்று குறைந்து வருகிறது,''என, தமிழக சுகாதார துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பின் சுகாதாரத் துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி நடக்கிறது. தினமும் 6900 மேல் பாதிப்பு உயர்ந்த நிலையில் தற்போது 6 ஆயிரத்திற்கு கீழ் வரத்துவங்கியுள்ளது. இது நல்ல அறிகுறி.
நகரங்களில் முக கசவம் அணிகின்றனர். பேரூராட்சி, ஊராட்சிகளில் விழிப்புணர்வு இல்லை. தமிழகத்தில் நோய் பாதிப்பு ஏறுமுகமாக இருந்தது. தற்போது நின்று சற்று உயர்கிறது. நோய் பரவல் எண்ணிக்கை பார்த்து பயப்பட வேண்டாம். தொய்வாக தெரிந்தாலும் படிப்படியாக பாதிப்பு குறையும். மதுரை,துாத்துக்குடி, கன்னியாகுமரியிலும் பாதிப்பு குறைந்துள்ளது.150 ஆம்புலன்ஸ் அனுமதிதினமும் 2 ஆயிரம் பரிசோதனை என்பதை 3 ஆயிரமாக உயர்த்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 150 ஆம்புலன்ஸ்கள் வாங்க விரைவில் அரசாணை வழங்கப்படும். தேனிமாவட்டம் கூடலுாரில் இறந்தவர் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்றது வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது.
வீட்டில் இறந்தாலும் ஒன்றரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். கூடுதலாக தேவைப்பட்டால் வாடகைக்கு எடுத்து கொள்வதற்கான அரசாணை வழங்கப்பட உள்ளது.மாவட்டம்தோறும் சித்தா முகாம்சென்னையில் 'மைக்ரோ பிளான்' திட்டத்தில் எந்தெந்த துறைகளுக்கு என்ன பணி என நிர்ணயித்து வேலை செய்ததில் தொற்று குறைந்துள்ளது.
இதே போல் பிற மாவட்டங்களில் மேற்கொள்வதில் நடைமுறை சிரமம் உள்ளது. 12 மாவட்டங்களில் சித்தா சிகிச்சை மையம் செயல்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மையம் விரிவுபடுத்தப்படும், என்றார். கலெக்டர் பல்லவி பல்தேவ், சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE