ரூ.1,500க்கு இ - பாஸ் வேலுாரில் வாலிபர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1,500க்கு 'இ - பாஸ்' வேலுாரில் வாலிபர் கைது

Added : ஆக 05, 2020
Share
வேலுார்; இந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், 'இ - பாஸ்' வாங்கித் தருவதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் அனுப்பி மோசடி செய்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில், கலெக்டர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் கூடிய ஒரிஜினல் இ - பாஸ் வாங்கித் தருவதாக, வேலுாரில் சில, 'வாட்ஸ் ஆப்' குரூப்களில் தகவல் வந்தது.அதில்,

வேலுார்; இந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், 'இ - பாஸ்' வாங்கித் தருவதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் அனுப்பி மோசடி செய்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்தியா முழுதும் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால், இரண்டு மணி நேரத்தில், கலெக்டர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் கூடிய ஒரிஜினல் இ - பாஸ் வாங்கித் தருவதாக, வேலுாரில் சில, 'வாட்ஸ் ஆப்' குரூப்களில் தகவல் வந்தது.அதில், ஏற்கனவே வழங்கிய இ - பாஸ்கள் வெளியிடப்பட்டன.

அலைந்து திரிவதை தவிர்க்க, இவரிடம் பலரும், 1,500 ரூபாய் கொடுத்து, இ - பாஸ் பெற்றுள்ளனர். புரோக்கர்இது குறித்து, ஊசூரைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர், இதயராஜ், 65, வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு புகார் செய்தார். போலீசார், அந்த, 'வாட்ஸ் ஆப்'பை கண்காணித்து, தகவல் அனுப்பியவர், வேலுார் பெரிய அல்லாபுரத்தைச் சேர்ந்த, 18 வயது வாலிபர் என கண்டுபிடித்தனர்.அவரை, மதியம், 1:00 மணிக்கு, அரியூர் போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில், ஏராளமான இ - பாஸ், கணினி, பிரின்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அந்த வாலிபர், 1,500 ரூபாய் பெற்று, தமிழகம் முழுதும் பலருக்கு, இ - பாஸ் வாங்கி தந்தது தெரிந்தது. இதற்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு தொடர்பு உள்ளதும், திருப்பூரைச் சேர்ந்த வடிவேலு என்பவர், இதற்கு மூளையாக செயல்பட்டதும், தமிழகம் முழுதும் புரோக்கர்களை வைத்துஉள்ளதும் தெரியவந்தது.

போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.சிக்கியது எப்படி?கைதான வாலிபர், கணினியில் டிப்ளமா படித்துள்ளார். வேலுாரில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணி செய்த அவருக்கு, ஊரடங்கால் வேலை போய் விட்டது.'கமிஷன் அடிப்படையில், இ - பாஸ் வாங்கித் தர, கணினி இயக்க தெரிந்த நபர்கள் தேவை' என்ற விளம்பரம், சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வந்துள்ளது.இதனால், அந்த பணியில் சேர்ந்துள்ளார். ஒரு, இ - பாஸ் வாங்கித் தந்தால், அவருக்கு, 500 ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.ரூ.500க்கு இ - பாஸ்?கடலுாரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் ஒருவர், 500 ரூபாய் கொடுத்தால், 30 நிமிடங்களில், இ - பாஸ் எடுத்து தருவதாகவும், இதுவரை, 50 ஆயிரம் பேருக்கு எடுத்து தந்துள்ளதாகவும் கூறும், 'வாட்ஸ் ஆப்' ஆடியோ பரவுகிறது.

அதில் கூறியிருப்பதாவது:நம் டிராவல்ஸ் மூலமாக கஸ்டமர்கள், டாக்சி சர்வீசில் உள்ள நண்பர்கள் இ - பாஸ் தேவைப்பட்டால், என் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். 30 நிமிடங்களில் பாஸ் தருகிறோம். ஒரிஜினல் பாஸ் என்பதால், யாரும் அச்சப்பட வேண்டாம்.இ - பாஸ் தேவைப்படுவோர், ஆதார் கார்டை போட்டோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி வையுங்கள். அதிகபட்சம், 30 நிமிடங்களில் பாஸ் எடுத்து கொடுத்து விடுவேன்.சர்வீஸ் சார்ஜ், 500 ரூபாய். இதுவரை, 50 ஆயிரம் பாஸ்களுக்கு மேல் வாங்கி கொடுத்துள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக, கடலுார் நகர போலீசார், ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X