எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு; பிரசாந்த் அறிக்கையால் திமுக அதிர்ச்சி

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையால், தி.மு.க., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தகவல் தெரிந்ததும், காங்கிரஸ் கட்சி, தி.மு.க.,விடம் பேரம் பேசத் துவங்கி விட்டது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், ஐந்து
DMK, Stalin, Prashant Kishor, Congress, MK Stalin, திமுக, காங்கிரஸ், ஸ்டாலின்

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையால், தி.மு.க., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தகவல் தெரிந்ததும், காங்கிரஸ் கட்சி, தி.மு.க.,விடம் பேரம் பேசத் துவங்கி விட்டது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், ஐந்து தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, 41 தொகுதிகள் தான் கிடைத்தன; அதில், எட்டு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில், 4 சதவீதம் ஓட்டுக்கள் தான் உண்டு என்பதால், ஒரு லோக்சபா தொகுதிக்கு, ஆறு சட்டசபை தொகுதிகள் என்ற அடிப்படையில், 48 தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்பதற்கு, காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.


தள்ளிவைப்பு:

ஆனால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 370வது சட்டப்பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில், சிறுபான்மையினர் ஓரணியில் திரண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால், தற்காலிகமாக அவர்களின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால், சிறுபான்மையினரின் ஓட்டுக்கள், காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக அதிகரித்துள்ளதை தான், லோக்சபா தேர்தல் முடிவுகள் காட்டின.

இந்நிலையில், தி.மு.க.,விற்கு தேர்தல் வியூகத்தை வகுத்து வரும், தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனம், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் குறித்து, 'சர்வே' எடுத்துள்ளது. அந்த சர்வே அறிக்கையில், காங்கிரஸ் கட்சிக்கு, 8 சதவீதம் ஓட்டுக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், தி.மு.க., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு, 4 சதவீத ஓட்டுக்கள் இருக்கும் போதே, 2016 தேர்தலில், அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேசியது. கடைசியில், 41 தொகுதிகளில் உடன்பட்டது. தற்போது அக்கட்சிக்கு, 8 சதவீதம் ஓட்டுக்கள் இருக்கிறது என்பதால், கூடுதல் தொகுதிகளை கேட்டு, நெருக்கடி தருமே என, தி.மு.க., மேலிடம் கவலையில் உள்ளது.


வலியுறுத்தல்:

இந்த தகவல் தெரிந்து, காங்கிரஸ் இப்போதே பேரம் பேசத் துவங்கி உள்ளது. தி.மு.க.,விடம், 60 தொகுதிகளை பெற்றாக வேண்டும் என, டில்லி மேலிடத்தில், தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் வலியுறுத்த துவங்கி விட்டன.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறுகையில், 'வரும், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள, 60 தொகுதிகளை பட்டியலிட்டுள்ளோம். 50 தொகுதிகளுக்கு குறைவாக பெற மாட்டோம்' என, தெரிவிக்கின்றன

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
16-ஆக-202012:18:00 IST Report Abuse
R KUMAR சபாஷ் காங்கிரஸ் தமிழ்நாட்டில் உள்ளது என்ற விவரமே () மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டு, அதிகமான இடங்களை கூட்டணியில் பெற முயற்சிசெய்ய வேண்டும். இல்லையென்றால் மாற்று வழிகளை ஆராயவேண்டும். நல்லது நடந்தால் சரி.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
16-ஆக-202001:01:02 IST Report Abuse
Aarkay இது பயங்கர பீலா microscope வைத்து தேடவேண்டிய நிலையிலுள்ள ஒரு கட்சியின், அழிவின் விளிம்பிலுள்ள ஒரு கட்சியின் ஓட்டுக்கள், என்னதான் ஒட்டகங்கள் ஆதரித்தாலும், உயர வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
15-ஆக-202022:39:46 IST Report Abuse
Unmai Vilambi ஒருத்தர் கேட்டார்: 'பொதுவா தெவசம் பண்ண எவ்வளவு கேப்பார்?' னு. நான் சொன்னேன் 'எனக்கு தெரிஞ்சு ஒரு பிராமணர் முன்னூத்தி என்பது கோடி சார்ஜ் பண்ணார்' என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X