அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக.,வுக்கு 'குட்பை' - பா.ஜ.,வில் கு.க.செல்வம்; மேலும் 16 எம்.எல்.ஏ., 12 மா.செ.,க்களுக்கு வலை

Updated : ஆக 05, 2020 | Added : ஆக 05, 2020 | கருத்துகள் (74)
Share
Advertisement
BJP, DMK, MLA, DMK MLA, Ku Ka Selvam, பாஜ, திமுக

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதியின் ஆதிக்கத்தால், அதிருப்தி அடைந்த, எம்.எல்.ஏ., - கு.க.செல்வம், பா.ஜ.,வில் இணையவுள்ளார். அவரை தொடர்ந்து, மேலும், 16 எம்.எல்.ஏ.,க்கள், 12 மாவட்ட செயலர்களை இழுக்கும் முயற்சியில், பா.ஜ., மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், அவர் வகித்த பதவியை, மூத்த நிர்வாகிகள், 10க்கும் மேற்பட்டவர்கள் எதிர்பார்த்தனர். அவர்களில் ஒருவர், தி.மு.க., தலைமை நிலைய செயலரும், ஆயிரம் விளக்கு தொகுதியின், எம்.எல்.ஏ.,வுமான கு.க.செல்வம். ஆனால், கட்சியில், தனக்கு ஜூனியரான சிற்றரசுவை, உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி பரிந்துரை காரணமாக, மாவட்ட செயலராக நியமித்ததை, கு.க.செல்வத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்நிலையில், டில்லியில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் சேரும் விருப்பத்தை, கு.க.செல்வம் தெரிவித்து உள்ளார். ஆனால், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஒருவர், கட்சி மாறினால், பதவி பறிபோகும் என்பதால், இணைப்பு அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க.,வில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. அந்த நேரத்தில், அக்கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ., எவரும், தி.மு.க.,வுக்கு தாவவில்லை.

ஆனால், உட்கட்சி பிரச்னை காரணமாக, ஒரு எம்.எல்.ஏ.,வை இழக்கும் நிலைமை, தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், செல்வத்தை தொடர்ந்து, 16 எம்.எல்.ஏ.,க்கள், 12 மாவட்ட செயலர்களையும் இழுப்பதற்குரிய, ரகசிய பேச்சு நடந்து வருவதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லியில், நேற்று மாலை, 5.:30 மணியளவில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின், நிருபர்களிடம், கு.க.செல்வம் கூறியதாவது: ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். என் தொகுதிக்கு உட்பட்ட, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மேலும் ஒரு, 'லிப்ட்' அமைத்து தரும்படி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து கேட்க, டில்லி வந்தேன்.

கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர்களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலை நடத்த, அவர் முன்வர வேண்டும்.பா.ஜ.,வில் நான் இணையவில்லை. இருப்பினும், பா.ஜ., தலைவர் நட்டாவை சந்தித்ததற்காக, என் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்தால், அதை சந்திக்க தயார்.இவ்வாறு, அவர் கூறினார்.

தி.மு.க.,வில் நயினார்?
தி.மு.க.,வை சேர்ந்தவர்களுக்கு, பா.ஜ.,வினர் வலை விரிப்பதால், அதற்கு போட்டியாக, பா.ஜ.,வில் இருந்து, நயினார் நாகேந்திரனை இழுக்க, தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் பதவி கிடைக்காத காரணத்தால், அக்கட்சி மீது, நயினார் நாகேந்திரன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

அவரை, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் நேரில் சந்தித்து சமரசம் செய்தும், அதிருப்தி நீங்கவில்லை. சமீபத்தில், தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேருவை, நயினார் நாகேந்திரன் சந்தித்து, தி.மு.க.,வில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இன்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.,வில் இணையும் திட்டமும் இருந்தது.

ஆனால், பா.ஜ., மேலிடத்தில் இருந்து, நயினார் நாகேந்திரனிடம் பேசி தடுத்துள்ளனர். இதற்கிடையில், 'நயினார் நாகேந்திரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் குணமான பின், தி.மு.க.,வில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabakaran - cuddalore,இந்தியா
13-ஆக-202013:46:40 IST Report Abuse
prabakaran முடியாதுன்னு எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
09-ஆக-202023:24:52 IST Report Abuse
Nallavan Nallavan எந்த கட்சியை நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி -ன்னு கிண்டல் செஞ்சானுவளோ அதே கட்சி கிட்டேயிருந்து தனது ஆட்களைக் காப்பாத்திக்கொள்ள போராட வேண்டியிருக்கு ............
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) தீயமுகவிற்கு மெரினாவில் ஒரு சமாதி ப்ளீஸ்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X